ராய்கர்: ஒடிசாவை சேர்ந்த ஒரு இளைஞர் அமேசானின் அலெக்சா கருவியை பயன்படுத்தி தீபாவளி பண்டிகையின் போது ராக்கெட் வெடித்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தங்களின் கொண்டாட்டங்களை மக்கள் வீடியோ பதிவுகளாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவை சேர்ந்த மணி என்பவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Mani's Projects Lab என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்படுகிறது. அதில் மணி என்பவர் அமேசானின் அலெக்சா கருவியை பயன்படுத்தி ராக்கெட்டை ஏவும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இவர் அலெக்சா ராக்கெட்டை ஏவு ("Alexa, launch the rocket") என கட்டளையிட , உடனடியாக அலெக்சா கருவி யெஸ் பாஸ், ராக்கெட்டை ஏவுகிறேன்("Yes boss. Launching the rocket" ) என பதிலளித்து உடனடியாக ராக்கெட்டை ஏவுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர், பலர் இதனை ஷேர் செய்துள்ளனர். Launching the rocket with Alexa என தலைப்பிட்டு அவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். நூற்றுக்கணக்கான சமூக வலைத்தளவாசிகள் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து மணி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் எவ்வாறு தான் இந்த சிறிய ராக்கெட் லாஞ்சிங் சிஸ்டம்மை அலெக்சாவை பயன்படுத்தி உருவாக்கினேன் என்பது குறித்த விளக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அலெக்சா கருவி வாயிலாக வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் எளிதாக ராக்கெட்டை ஏவ முடியும் என அவர் கூறியுள்ளார். ESP32/ESP8266 microcontroller மூலம் எப்படி நமது வாய்ஸ் கண்ட்ரோலில் ராக்கெட்டை வெடிக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த வீடியோவிற்கு அமேசான் இந்தியா மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் கமெண்ட் அளித்துள்ளன. அமேசான் இந்தியா நிறுவனம் handsfree Diwlai தீபாவளி என அவரது வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணி அண்மையில் தான் பி டெக் படிப்பை முடித்துள்ளார்.

இவர் கல்லூரி முதலாம் ஆண்டு முதலே பல்வேறு ப்ராஜெக்ட்களை பரிசோதனை செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். தற்போது வேலை தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications