அமெரிக்க சிலிக்கான் வேலி-யின் முக்கிய முகமாக இருந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் தற்போது அந்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் முக்கிய தலையாக மாறியுள்ளார். அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் செயற்கை நுண்ணறிவு மூத்த கொள்கை ஆலோசகராக டொனால்டு டிரம்ப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது பலர் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக வலதுசாரி அமைப்புகளின் முக்கிய பிரமுகரான லாரா லூமர், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் கிருஷ்ணனின் நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப்-ன் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" கொள்கைக்கு எதிராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார் என்ற கருத்தை முன்வைத்தார். லாரா லூமரின் பதிவு சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.

லாரா லூமர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்ரீராம் கிருஷ்ணன் கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி செய்த பதிவை ஷேர் செய்து, லாரா லூமர் செய்த பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரா லூமர் தனது பதிவில், கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்கினால் அமெரிக்க STEM பட்டதாரிகளின் நலன்களை நேரடியாக பாதிக்கும் என்றும், உள்நாட்டு வேலைவாய்ப்பு சந்தையை அச்சுறுத்தும் என்றும் கூறியுள்ளார். இத்தகைய கொள்கைகள் வேலைவாய்ப்பு போட்டியை அதிகரித்து, இறுதியில் அமெரிக்க தொழிலாளர்களை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
லாரா லூமர்-ன் பதிவை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்தியாவிலும் பலர் ஹெச்1பி விசா, கிரீன் கார்டு ஆகியவற்றில் அமெரிக்க அரசு கொண்டுவரப்போகும் மாற்றம், அதில் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆதிக்கம் போன்றவற்றை குறித்து பதிவுகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீராம் கிருஷ்ணனின் பதிவுக்கு எதிராக லாரா லூமர் விமர்சனங்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி கொள்கை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள டேவிட் சாக்ஸ் மற்றும் எலான் மஸ்க் போன்ற முக்கிய நபர்கள் ஆதரவாகவும், விளக்கம் கொடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

கிருஷ்ணனின் நிலைப்பாட்டை விளக்கும் விதமாக, டேவிட் சாக்ஸ் செய்த பதிவில், ஸ்ரீராம் கிரீன் கார்டு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என கூறவில்லை, அதற்கு பதிலாக, கிரீன் கார்டுகளுக்கான தற்போது இருக்கும் நாடு சார்ந்த வரம்பை மட்டுமே நீக்க வேண்டும் என கூறுகிறார்.
அமெரிக்க அரசு தற்போது உலகின் அனைத்து நாடுகளும் ஓரே எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்தியா போன்ற பெரிய அளவிலான திறமையான ஊழியர்கள் அமெரிக்காவில் நீண்ட காலமாக பணியாற்றி தகுதி உடன் இருந்தாலும் அவர்கள் 11 வருடம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பல நாடுகளுக்கு இந்த காத்திருப்பு காலமே இல்லாமல் உள்ளது.
தற்போதைய முறையில், தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு நாட்டிற்கும் சமமான எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளை ஒதுக்கப்படுகின்றன, இதன் விளைவாக அதிக தேவை உள்ள நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் ஏற்படுகிறது.
கிரீன் கார்டு தகுதிக்கு திறன் அடிப்படையிலான அளவுகோல்களை தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களின் தாய் நாட்டைப் பொருட்படுத்தாமல், மிகவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் டேவிட் சாக்ஸ், ஸ்ரீராம் கருத்தை விளக்கி லாரா லூமர்-க்கு பதிலடி கொடுத்தார்.
இதற்கு எலான் மஸ்க் சுருக்கமாக Make Sense என் டேவிட் சாக்ஸின் விளக்கத்தை பதில் அளித்து ஸ்ரீராம் கருத்துக்கு
லூமரின் பதிவு, ஸ்ரீராம் கிருஷ்ணனின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களின் நலன்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன்களை முன்னுரிமைப்படுத்துகிறது என்ற கருத்தை மையமாகக் கொண்டதாக இருந்த காரணத்தால் பலரும் இதை எதிர்த்து பதிவிட்டு வந்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications