இந்திய டெலிகாம் துறை 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறி வரும் நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்கு வர துவங்கியுள்ளது.
5ஜி ஸ்மார்ட்போன் என்பது புதிய வர்த்தகப் பிரிவாக இருக்கும் நிலையில் போட்டி அதிகமாக இருக்கும், குறிப்பாக மலிவான விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சீன நிறுவனங்களின் போட்டியும், ஆதிக்கமும் அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் சீன நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
5ஜி ஸ்மார்ட்போன்
5ஜி ஸ்மார்ட்போன் விலை அதிகமாக இருக்கும் என்றும், இதை வாங்குவதற்கு மக்கள் தற்போது தயாராக இல்லை என்றும் பலரும் சந்தை கணிப்புகள் வந்துகொண்டு இருக்கும் போது சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ வெறும் 12000 ரூபாயில் 5ஜி ஸ்மார்ட்போன்-ஐ விற்பனைக்குக் கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியானது.
10000 ரூபாய்
இதைத் தொடர்ந்து தற்போது இந்தியா ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான லாவா இண்டர்நேஷ்னல் நிறுவனம் தீபாவளிக்கு முன்பு LavaBlaze 5G என்ற பெயரில் 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் 10000 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மொபைல் டெல்லியில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய டெலிகாம் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவா வெளியிட்டார்.
தீபாவளி பண்டிகை
தற்போதைய சந்தை நிலவரத்தின் படி இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் என்றால் அது LavaBlaze 5G தான் என மொபைல் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். தீபாவளி பண்டிகை முதல் LavaBlaze 5G போனுக்காக ப்ரீ-புக்கிங் தொடரும் என லாவா இண்டர்நேஷ்னல் தலைவர் மற்றும் வர்த்தகத் தலைவர் சுனில் ரெய்னா தெரிவித்துள்ளார்.
LavaBlaze 5G ஸ்மார்ட்போன்
லாவா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள LavaBlaze 5G ஸ்மார்ட்போனில் MediaTekDimensity 700 சிப் இருக்கும், இதோடு 50 மெகாபிக்சல் கேமரா இருக்கும், 8MP பிரென்ட் கேமரா இருக்கும், இதேபோல் anonymous callகளை ரெக்கார்டு செய்யும் வசதியும் இந்தப் போனில் இருக்கும் எனத் தெரிகிறது.
மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்
இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்கள் எவ்வளவு கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம் என ஆலோசனை செய்து வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பு அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற முடியும். இதனால் டெலிகாம் சேவையைக் குறைவாக வைக்கவும் முடியும்.


Click it and Unblock the Notifications