இந்திய சுதந்திரத்திற்கு பின்பு உருவாக்கப்படும் முதல் தனியார் மலைநகரம் தான் LAVASA, இத்திட்டம் 2000 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு பல வருடங்களாக திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட பின்பு 2010 ஆம் ஆண்டில் சுற்றுசூழல் மற்றும் காடுகள் விதிமுறைகளை மீறியதற்காக இத்திட்டத்தின் கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் LAVASA திட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் பல்வேறு விண்ணப்பங்களை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பெற்றது. இதில் 1814 கோடி ரூபாய் மதிப்பிலான அஜய் ஹரிநாத் சிங்-ன் டார்வின் பிளாட்ஃபார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் கைப்பற்றல் மற்றும் மேம்படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

புனே-வில் இருக்கும் இந்த தனியார் மலை நகர திட்டத்திற்கு தீர்வு காண 5 வருடங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் 2018ல் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்திடம் இருந்த LAVASA கார்ப்ரேஷன் திவாலாக அறிவிக்கப்பட்டு IBC விதிகள் படி தீர்வு காணும் முயற்சியில் NCLT இறங்கியது.
இந்த 5 வருட முயற்சியில் அஜய் ஹரிநாத் சிங்-ன் டார்வின் பிளாட்ஃபார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்தை 1814 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது. இத்திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறது என இந்நிறுவனம் முன்கூட்டியே அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்பித்துள்ள நிலையில் அதனை பின்பற்றி சுதந்திர இந்தியாவின் முதல் மலைநகரமான LAVASA திட்டத்தை முடிக்க உள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான அஜய் ஹரிநாத் சிங் டார்வின் பிளாட்ஃபார்ம் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். இந்த வர்த்தக குழுமம் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், ரீடைல் வர்த்தகம், உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து, சுரங்கம், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நிதி சேவை உள்ளிட்ட பல துறைகளில் ஈடுப்பட்டு வரும் 8.4 பில்லியன் டாலர் மதிப்புடைய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உள்ளது.
மும்பை பல்கலைகழக பட்டதாரியான அஜய் ஹரிநாத் சிங் டார்வின் குரூப் நிறுவனத்தை 2009ல் துவங்கினார். LAVASA திட்டத்தை கைப்பற்றும் டார்வின் பிளாட்ஃபார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 2010ல் துவங்கப்பட்டது. இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்ரேஷன் ஆகிய நிறுவனங்களை கைப்பற்றும் திட்டத்தில் அஜய் ஹரிநாத் சிங்-ன் டார்வின் குரூப் பங்குப்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications