கடந்த ஆறு மாதங்களாக சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் ஜூலை 12 ஆம் தேதியன்று அவர்களது திருமணத்துடன் வெகு விமர்சையாக முடிவடைந்தது. ஆசியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி இல்லத் திருமணம் உலகளாவிய பிரபலங்களை மட்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் உலகளாவிய பிரபலத்தை தந்துள்ளது.
உலக மக்களின் கவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி இந்தத் திருமணம் திசை திருப்பியுள்ளது. மற்ற இந்திய கோடீஸ்வரர்கள் போல் அல்லாமல் முகேஷ் அம்பானியின் நிகழ்ச்சி தேர்வுகள் உலகக் கவனத்தை ஈர்த்தது.

குஜராத்தில் மூன்று நாள் திருமண முன்வைபோக நிகழ்ச்சி, இத்தாலிக்கு உல்லாச படகு சவாரி போன்றவை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பேரை ஈட்டித் தந்தது. போதாக்குறைக்கு உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களான ஜஸ்டீன் பைபர், ரிஹானா ஆகியோரின் கச்சேரியும் கலக்கின. சமூக தலங்களில் கோடிக்கணக்கானவர்களை இந்த நிகழ்ச்சிகள் கவர்ந்தன.
அம்பானி இல்லத் திருமணம் நிச்சயம் உள்ளூர் பொருளாதார ஏற்றத்துக்கு உதவும் என்று பிசினஸ் மற்றும் பிராண்டு ஸ்ட்ராடஜி நிபுணரான ஹரிஷ் பிஜூர் கூறுகிறார்.
மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திருமணப் பொருளாதாரம் கணிசமான பங்களிப்பைச் செய்கிறது என்று சொன்னால் போதுமானது. திருமணங்களுக்கு பணம் செலவழிக்கப்படுவதால், பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. இத்தகைய செலவுகள் அதிக வேலைகள், செயல்பாடுகள், வருமானம் மற்றும் அதன் விளைவாக மக்களின் கைகளில் அதிக பண புழக்கத்தை உருவாக்கும் ஒரு நல்லொழுக்க சுழற்சியைத் தொடங்குகிறது என்கிறார்.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் கணிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5000 இந்தியத் திருமணங்கள் வெளிநாடுகளில் நடைபெறுகிறது என்றும் இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் வணிகம் நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ளூர் தொழில் இழப்போடு அரசுக்கு வருவாய் வரி இழப்பும் ஏற்படுகிறது.
இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில் 80 சதவீத செலவீனம் சரக்கு மற்றும் சேவைகளில்தான் இருக்கிறது. இதற்கான பணம் வியாபாரிகள் புழக்கத்துக்கு வருவதால் பொருளாதார ஏற்றத்துக்கு உதவுகிறது.
2024இல் உள்ளூர் தொழில்கள் ரூ.4.74 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகறத. இந்தத் தொகை அடுத்து வரும் சில மாதங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் ஏற்படும் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
Story written by: Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications