இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை காட்டிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்து ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், குறுகிய காலத்தில் ஒரு தொழில்முனைவோர் அதிக பணத்தை சம்பாதிப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அதேபோல் படித்த துறையில் அதே துறையில் வேலை பார்த்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதில்லை. நமக்கு விருப்பமான தொழிலிலும் ஈடுபட்டாலும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் இதற்கு நல்ல உதாரணமாக குர்லீன் சாவ்லாவை நாம் சொல்லலாம்.

குர்லீன் சாவ்லா படித்தது என்னவோ சட்டம் ஆனால் சம்பாதிப்பது விவசாயத்தில். ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் மாதந்தோறும் சுமார் ரூ.9 லட்சம் சம்பாதிக்கிறார். குர்லீன் சாவ்லாவின் தனித்துவமான வாழ்க்கையின் சில பக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் குர்லீன் சாவ்லா.
இவர் புனேயில் உள்ள இந்திய சட்ட சங்கத்தின் சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டம் பயின்றுள்ள போதிலும் வக்கீல் ஆக பணியாற்ற அவர் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர் ஜான்சிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெட்டி படுக்கையுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். வீட்டில் அவரால் சும்மா உட்கார்ந்து இருக்க முடியவில்லை. அப்போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்தால் என்ன யோசித்தார்.
இதனையடுத்து ஆன்லைன் தளங்களில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்வது குறித்து அறிந்து கொண்டார். முதலில் சோதனை முயற்சியாக தனது வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆரம்பித்தார். சோதனை முயற்சி பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனையடுத்து தனது தந்தையின் விவசாய தோட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் வறண்ட நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி செடிகளை வளர்க்க தொடங்கினார். இதற்கு அவரது தந்தையும் துணையாக நின்றார். தற்போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடி மூலம் நல்ல வருமானம் ஈட்டுகிறார்.
குர்லீன் சாவ்லா தினமும் 70 கிலோ ஸ்ட்ராபெர்ரி விற்பனை செய்கிறார். இதன் வாயிலாக அவர் தினந்தோறும் சுமார் ரூ.30,000 சம்பாதிக்கிறார். ஜான்சி ஆர்கானிக்ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த இணையதளம் வாயிலாக மக்கள் அவரிடம் இருந்து ஸ்ட்ரபெர்ரி பழங்களை ஆன்லைனில் வாங்கலாம். பிரதமர் நரேந்திர மோடியே தனது மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் குர்லீன் சாவ்லை அவரது முயற்சிக்காக பாராட்டி பேசியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications