பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், அதன் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஒன்றாக பணி நீக்க நடவடிக்கையினை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையானது, விற்பனை சரிவு, லாபத்தில் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் திட்டமிடபட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், மெட்டா நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், இது மட்டும் அல்ல பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை குறையலாம்
ஏற்கனவே புதிய பணியமர்த்தலை முடக்கியிருந்த நிறுவனம், 2023ல் மெட்டா நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமாக குறையலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆர்டர்கள் தயார் செய்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று முதல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எவ்வளவு பேர் பணி நீக்கம்?
செப்டம்பர் 30 நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தில் மொத்தம் 87,000 ஊழியர்களுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில்,இதில் சுமார் 10% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, பேஸ்புக் தொடங்கப்பட்ட 2004ல் இருந்து பார்க்கும்போது, இதுபோன்ற நடவடிக்கை இதுவே முதல் முறையாகும்.
விளம்பர வருவாய் சரிவு
உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பர வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. முன்னதாக இந்த செலவு குறைப்பு நடவடிக்கையினை மெட்டா நிறுவனம் இதனை அனைத்து துறைகளிலும் எடுத்து வருவதாக கூறியது. செலவு குறைப்பின் மற்றொரு நடவடிக்கையாக புதிய பணியமர்த்தலையும் முடக்கியுள்ளது.
மார்ஜின் பாதிப்பு
செலவுகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் விளம்பர வருவாயும் குறைந்துள்ளது. இதன் காரணமாக இதன் மார்ஜின் விகிதமும் பாதிக்கப்பட்டுள்ளது. மெட்டாவுக்கு போட்டியாக டிக்டாக் கடுமையான போட்டியாளராக பேஸ்புக்கிற்கு அமைந்துள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர்களை டிக்டாக் ஈர்த்து வரும் நிலையில் இது மேற்கோண்டு, மெட்டாவுக்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டாவெர்ஸ் திட்டம்
ஏற்கனவே வருவாய் சரிவுக்கு மத்தியில் தத்தளித்து வரும் நிறுவனம், பேஸ்புக்கின் அடுத்த கட்டமாக மெட்டாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகமாக வளர்த்தெடுக்க, மார்க் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றார். ஆனால் இதனால் எந்தளவுக்கு பயன் தரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் காலாண்டில் மெட்டா நிறுவனம் பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
ட்விட்டரும் அப்படி தான்
மெட்டா நிறுவனத்தினை போல ட்விட்டர் குழுமமும் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகின்றது. இது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 50% பணி நீக்கம் செய்திருக்கலாம் என தெரிகிறது. ட்விட்டர் நிறுவனமும் விளம்பர வருவாய் சரிவினைக் கண்டு வரும் நிலையில், ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதாக எலான் மஸ்க் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.
சரிவுக்கு மத்தியில் அதிரடி நடவடிக்கை
இதற்கிடையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட சிலரை மீண்டும் நிறுவனத்திற்கு பணியாற்ற அழைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் முதல் முறையாக சரிவினைக் கண்டுள்ள மெட்டா நிறுவனம், இத்தகைய அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
மிகப்பெரிய பணி நீக்கம்
இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் மெட்டா நிறுவனம் 11,000 பேருக்கு மேலாக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது டெக் நிறுவனங்களில் மிகப்பெரிய பணி நீக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications