உலகளவில் டெக் நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கும். குறிப்பாக அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்களின் 3ல் ஒரு பங்கு ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தான்.
டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் 90 நாட்களில் புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய காட்டாயம் இருந்தது. இதில் இருந்து தப்பிக்க புதிய வேலைவாய்ப்புகளை தேட வேண்டும், ஆனால் சந்தையில் வேலைவாய்ப்புகள் இல்லை, இதனால் பலர் புதிய நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து அமெரிக்காவில் குடியுரிமை பெற துவங்கினர்.
ஆனால் இந்த விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கே தலைவலியாக மாறியுள்ளது.
டெக் ஊழியர்கள்
கொரோனா தொற்று காலத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 63 சதவீதம் பேர் பணிநீக்கத்திற்கு பின்பு புதிய தொழிலை துவங்கி தொழில்முனைவோர் ஆக உருவெடுத்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் இதில் 93 பேர் தாங்கள் வெளியேறிய நிறுவனத்துடனே போட்டிப்போடும் வகையில் வர்த்தகத்தை துவங்கியுள்ளனர்.
பணிநீக்கம்
Clarify Capital நிறுவனத்தின் ஆய்வின் படி பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்களில் 4ல் 1 டெக் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது, அதற்கான டிமாண்ட்-ம் இல்லை என்பது தான் உண்மை. இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்களுக்கு முன்பு வாங்கிய சம்பளத்தை காட்டிலும் அதிக தொகையை சம்பளமாக அளிக்க முடியாது என்பது அடுத்த பிரச்சனை.
புதிய தொழில்
இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 63 பேர் சொந்தமாக தொழில் துவங்கியுள்ள நிலையில், 83 சதவீதம் பேர் டெக் துறையிலேயே புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர வருமானம்
சொந்தமாக தொழில் துவங்கியவர்களின் வருடாந்திர வருமானம் முன்பை விடவும் 13000 டாலர் சராசரியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் சொந்தமாக பிஸ்னஸ் துவங்கிய பின்பு அனைவரும் job security-ஐ உணர்கிறார்கள்.
என்ன காரணம்
மேலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் 6 மாதத்திலேயே தொழில் துவங்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர். சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என முடிவு எடுக்க முக்கியமான காரணம் அதிகப்படியான கரியர் வளர்ச்சி, அதிக பணம், புதிதாக எதையாவது புதிதாக உருவாக்க வேண்டும், ஒரு குழு அதிகாரிகளை தலைதாங்க வேண்டும், நானே ராஜா நானே மந்திரியாக இருக்க வேண்டும், அனைத்திற்கும் மேலாக புதிய வேலையை பெறுவது கடினமாக உள்ளதாலும் புதிய தொழிலை துவங்க முக்கிய காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications