ஒருவரை பணி நீக்கம் செய்ய ஒரு நல்ல வழி என்பது இல்லை. ஆனால் பயங்கரமான பல வழிகள் உள்ளன. சமீபத்தில் பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தினை சமீபத்தில் எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.
கையகப்படுத்திய கையோடு முதல் நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை பணி நீக்கம் செய்தார். அது மட்டும் அல்ல ட்விட்டர் நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்
அந்த சமயத்தில் மற்ற பிரபல டெக் நிறுவனங்கள் பலவும் மோசமான பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்தன. குறிப்பாக மைக்ரோசாப்ட், மெட்டா, சிஸ்கோ, அமேசான் என பலவும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தன.
இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. பைஜூ, சோமேட்டோ, ஓபா, மீஸோ, சேல்ஸ்போர்ஸ், சிஸ்கோ என பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.
தலைவர்களின் கருத்து
கடந்த ஆண்டு இந்திய வம்சாவளியினை சேர்ந்த பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், கடந்த டிசம்பர் மாதத்தில் 900 பேரை ஒரே ஜூம் காலில் பணி நீக்கம் செய்தார். இது குறித்தான வீடியோவானது சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டது. அதேபோல ஹைபர் சோஷியல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிராடென் வால்கே, தனது லிங்க்ட் பக்கத்தில், தனது நிறுவனத்தில் பணி நீக்கம் செய்த பிறகு கண்ணீர் விட்டார்.
ஜும் கால் மூலம் பணி நீக்கம்
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நவம்பர் 2 அன்றும் 15 நிமிட ஜுன் அழைப்பின் மூலம், 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் கூற்றுப்படி, 15 மிடங்களுக்குள் மெயில் அனுப்பப்பட்டது. அவசர அவசரமாக ஆன்லைனில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவசர அவசரமாக ஊழியர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இனி அலுவகத்திற்கு வரவேண்டாம் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.
நிறுவனங்களின் திட்டம் இது தான்
ஒருவரை பணியமர்த்துவதன் மூலம் அவர்கள் நம்பிக்கையை வழங்குகிறார்கள் என்பதை நிறுவனங்கள் உணருவதில்லை. அதேபோல பணி நீக்கம் செய்யும்போது எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்கள் என பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் ஊழியர் கூறுகின்றார். அடுத்த மூன்று நான்கு நாட்களுக்கு கூட அவர்கள் அணுக விடவில்லை என BTயில் வெளியான செய்தியானது தெரிவித்துள்ளது.
தனியார் வேலையில் பாதுகாப்பு இல்லை
கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான அன்அகாடமி-யின் முன்னாள் ஊழியர் ஒருவர், தனியார் வேலையில் எந்த பாதுகாப்பும் இல்லை. பெரிய நிறுவனங்களில் பணி புரிந்தால் பணி நீக்கம் என்பது பெரியளவில் இருக்காது என நான் நினைத்தேன். ஆனால் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இணைந்த ஒரு மாதத்தில் 10% பேரில் தானும் ஒருவராக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் நிறுவனத்தின் உதவியால் 10 நாட்களில் இரண்டு மூன்று இண்டர்வியூக்கான அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார்.
பலரும் பணி நீக்கம்
தலைமை நிர்வாக அதிகாரி கெளரவ் முன்ஜால் அன்அகாடமியின் பணி நீக்கத்திற்கு மன்னிப்பு கோரினார். கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் பல வேலை வாய்ப்புகளை ஒருவரே பெற்றனர். ட்விட்டர், மெட்டா, அமேசான், சேல்ஸ்போர்ஸ், சிஸ்கோ, பைஜூ, சோமேட்டோ, ஓலா, மீஸோ உள்ளிட்ட நிறுவனங்கள் 142,942 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
அனைத்து துறைகளிலும் பணி நீக்கம்
இந்தியாவில் 15,000 ஸ்டார்ட் அப் ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் பல டெக் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன. லார்ஜ் கேப் டெக் நிறுவனங்கள் ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன. பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறையில் கூட பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. இதனால் எல்லாவிதமான துறைகளிலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளமும் ஒரு வாய்ப்பு
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தங்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள, சமூக வலைதளனங்கள் மிக சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. சமீபத்திய காலமாக இதுபோன்ற அறிவிப்புகளை பரவலாக காண முடிகிறது.
பல நிறுவனங்கள் ஆஃபர்
பலருக்கும் இது வாழ்வாதரத்தை அளிக்கும் ஒரு அம்சமாகவும் இருந்து வருகின்றது. பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அவர்கள் திறன் காரணமாக பணி நீக்கம் செய்யப்படவில்லை. இங்கு நிலையே வேறு. ஆக அவர்களை பயன்படுத்திக் கொள்ள நிறுவனங்கள் விரும்புகின்றன.


Click it and Unblock the Notifications