இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் சம்பள உயர்வு அளிக்கப்படும் காலக்கட்டத்தில் எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உலகளாவில் 2023 ஆம் ஆண்டு ரெசிஷன் உருவாகக்கூடிய வாய்ப்புகள் கொண்ட நாடுகள் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டு உள்ளது. இந்த தகவுகளின் படி இந்தியாவில் இந்த ஆண்டு ரெசிஷன் உருவாக 0% வாய்ரப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

IMF அமைப்பு வெளியிட்டுள்ள World Output Projection 2023 தரவுகளின் படி REAL GDP தரவுகள் அடிப்படையில் இந்தியா 5.9% REAL GDP உடன் அதிக பொருளாதார வளரச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.
இப்படியிருக்கும் இந்தியாவில் தான் உலகளவில் பணிநீக்கம் அதிகமாக இகுக்கும் வேளையில் புதிதாக பணியில் சேர்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது மட்டும் அல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதாக சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதனால் மாத சம்பளக்காரர்கள் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மாற திட்டமிடுவோருக்கு கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் பணிநீக்கம் உச்சத்தில் இருக்கும் வேளையில் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தாலும், அதிகப்படியான நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை சேர்க்கும் அளவீட்டை குறைத்துள்ளது. அதாவது Hiring பணிகளை முடக்கியுள்ளது, இது புதிய வேலைவாய்ப்புகளை தேடுவோருக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

தற்போது செய்யப்பட்ட ஆய்வில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 53 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களை புதிதாக பணியில் சேர்த்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 64 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் Hiring பணிகள் மந்தமடைந்துள்ளதாக Indeed வேலைவாய்ப்பு தளம் தனது ஆய்வுகளை முன்வைத்துள்ளது.
இந்திய சந்தையில் இருக்கும் பல்வேறு நிலையற்ற தன்மை காரணமாக ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகப்படியான நெருக்கடியும், குழுப்பமும் உருவாகியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் கிக் எக்னாமி பிரிவு ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறுவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications