அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். டிரம்பின் வரி விதிப்பு சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஹேயர் , லெனோவோ,மோட்டோரோலா, ஒப்போ, விவோ மற்றும் டிசிஎல் போன்ற சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் அமெரிக்காவில் செயல்பாடுகளை கொண்டுள்ளன.
இருப்பினும் பெரும்பாலான தயாரிப்புகளை சீனா மற்றும் வியட்நாமில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளிடமிருந்தோ அல்லது ஒப்பந்த உற்பத்தியாளர்களிடமிருந்தோ தான் பெறுகின்றன. ஆனால், டிரம்பின் கூடுதல் வரி அமலுக்கு வந்தால் இனி அது அவர்களுக்கு லாபகரமாக இருக்காது. இதனால் சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றி, இங்கிருந்து பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யாலமா என்று யோசித்து வருகின்றன. ஏனென்றால் சீன பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை காட்டிலும் இந்திய பொருட்களுக்கான வரி பாதிக்கும் குறைவாகும். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளது.

உதாரணமாக ஹேயர் நிறுவனம் அமெரிக்காவில் விற்கப்படும் தனது தயாரிப்புகளுக்கு சீனாவுக்கு பதிலாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. கிரேட்டர் நொய்டா மற்றும் புனேவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் அமெரிக்காவில் ஜிஇ பிராண்டின்கீழ் விற்கப்படும் ஏர் கண்டிஷனர்கள், மைக்ரோ ஓவன்கள் மற்றும் பிற வீட்டு உபகரணங்களுக்கான புதிய அசெம்ளி லைன்கள அமைப்பதற்கு பயன்படும். அதேசமயம், சீன நிறுவனங்களின் இந்த யோசனை நன்றாக இருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் சீன நிறுவனங்களுக்கு சிக்கல் உள்ளது.
இந்தியாவுடன் நிலை எல்லையை பகிர்ந்து கொள்ளும் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டில் இருந்தும் எந்தவொரு அன்னிய நேரடி முதலீட்டுக்கும் மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது கட்டாயமாகும். 2020ம் ஆண்டில் நிகழ்ந்த எல்லை மோதலுக்கு பிறகு இருதரப்பு (இந்தியா-சீனா) உறவுகள் கடுமையாக மோசமடைந்ததிலிருந்து, சீன நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு திட்டங்களுக்கு இந்திய அரசிடம் அனுமதி பெறுவது கடினமான ஒன்றாக மாறி விட்டது. இது தற்போது சீன நிறுவனங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், முன்னணி சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்டின் இந்திய தலைமை நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் சீன நிறுவனங்களுக்கான அன்னிய நேரடி முதலீட்டு அனுமதிகளை மத்திய அரசு தளர்த்தினால், இந்திய மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications