டெல்லி: இந்தியா இளைஞர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி பெறும் வகையில் மத்திய அரசு பிரதமர் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தில் இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க முன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐடிசி, ரிலையன்ஸ் ரீடெய்ல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் இன்டர்ன்களை பணிக்கு அமர்த்த முன்வந்துள்ளன. இவர்கள் விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் இன்டர்ன்களாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறையின் கீழ் பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் www.pminternship.mca.gov.in இணையதளம் வாயிலாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஓராண்டு காலம் வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்.
ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் கீழ் குடும்ப வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இதில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் ஓராண்டு காலம் வேலை வாய்ப்பு பயிற்சியை பெறுவார்கள் என்பதோடு மட்டும் இல்லாமல் மத்திய அரசு சார்பில் இவர்களுக்கு 5000 ரூபாய் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யதுள்ளது.
முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவானது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கான இணையதளத்தில் சோதனை முயற்சியாக 2200 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதானி குழுமம், கோகோ கோலா, ஈச்சர், டெலாய்ட், மகேந்திரா குழுமம், மாருதி சுசுகி, பெப்சிகோ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் இணைந்து வேலைவாய்ப்பு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளன. மகேந்திரா குழுமம் தங்களுடைய பல்வேறு தொழில் பிரிவுகளில் 2100 இன்டர்ன்களை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் அக்டோபர் 12 முதல் 25ஆம் தேதிக்குள் pminternship.mca.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நவம்பர் 8 முதல் 15ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்படும்.முதல் பேட்ஜ் இன்டர்ன்கள் தங்களுடைய ஓராண்டு கால வேலை வாய்ப்பு பயிற்சியினை டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.
Written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications