தனியார் துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மார்ஜினல் காஸ்ட் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
இது கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) முதலே நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியின் வலைத்தளத்தின் படி, இதன் அடிப்படை விகிதத்தையும் 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், தற்போது மீண்டும் நவம்பர் 7 முதல் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து ஹெச்.டி.எஃப்.சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த எம்.சி.எல்.ஆர் விகிதம் 6 மாத காலம், 1 வருடம் மற்றும் இரண்டு வருடம் உள்ளிட்டவற்றுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முறையே 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.10, 8.30 மற்றும் 8.40 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதே 3 ஆண்டுகளுக்கான விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு மாதம் மற்றும் 3 மாதங்களுக்கு முந்தைய விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதே ஹெச்.டி.எஃப்.சியில் பேஸ் ரேட் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 9.20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு இனி மாத மாதம் செலுத்தும் இ.எம்.ஐ குறையும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக ஐந்து முறை வட்டி குறைப்பு செய்துள்ளது. இது 135 அடிப்படை புள்ளிகள் இதுவரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்தாலும், அதன் பலன்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சரிவர கொடுப்பதில்லை. இதனால் வட்டி குறைப்பின் பலன் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் ரிசர்வ் வங்கி இந்த எம்.சி.எல்.ஆர் வட்டி விகித முறையை அனைத்து வங்கிகளும் செயல்படுத்த கூறி வருகிறது. இந்த நிலையில் தனியார் துறையை சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதன் வட்டி விகிதங்களை குறைதிருப்பது, அதன் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி தனிநபர் கடன், சில்லறை கடன், ஆட்டோ மற்றும் மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கு இந்த எம்.சி.எல்.ஆர் முறையை செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications