அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. முத்தான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!

சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாட்களுக்கான பணப்பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளை வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாட்களுக்கான பணப்பலன் பெரும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனக் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. முத்தான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!

எனவே அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களை சரண் செய்து பணப்பலன் பெறலாம். இதன்படி 15 நாட்கள் வரை பணப்பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என்றும் இதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்ததும் தாங்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஓராண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாக பெறலாம் என்றும் மீதமுள்ள நாட்களை சேர்த்துக்கொண்டே வந்து ஓய்வு பெறும்போது அந்த நாட்களை சரண் செய்து பணமாக பெறலாம் என்றும் விதிமுறை நடைமுறையில் இருந்தது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது அரசின் நிதி நிலைமையை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலின் போது திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தையும் திரும்ப வழங்குவோம் என அறிவித்திருந்தது.

எனவே அரசு ஊழியர்கள் தங்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரையிலான தங்களுடைய விடுப்பை சரண் செய்து இனி பணப்பலன் பெற முடியும்.

இது தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதன்படி பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் 40,000 பணியிடங்கள் வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பப்படும் என கூறினார். 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+