இஸ்ரேல் நாட்டை சுற்றி அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்து வரும் வேளையில், ஈரான் - இஸ்ரேல் - லெபனான் இடையில் பதில் தாக்குதலும் உக்கிரமடைந்துள்ளது, இன்று காலையில் லெபனானில் இருந்து ஏவப்பட்ட 15 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் துறைமுக நகரமான ஹைஃபா-வை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த 5 ஏவுகணை மூலம் ஒரு உணவகம், வீடு மற்றும் முக்கியமான வீதி ஒன்றிலும் ஏவுகணை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் எப்போதும் கிழக்கு பகுதியில் இருந்து மட்டுமே வரும் சைரன் சத்தம் இந்த முறை வடக்கு நகரமான திபெரியாஸிலும் (Tiberias) சைரன்கள் ஒலித்தன. இது இஸ்ரேலின் சரிவாகவும் பார்க்கப்படுகிறது.

இன்று காலை லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலின் அப்பர் கலிலி பகுதியில் சுமார் 15 ராக்கெட்டுகளை ஏவப்பட்டது. இந்த தாக்குதலை உடனே இஸ்ரேல் நாட்டின் ஐயன் டிரோம் கண்டறிந்த நிலையில் 10 ஏவுகணைகளை விண்ணிலேயே பதில் தாக்குதல் நடத்தித் தகர்க்கப்பட்டது. மீதமுள்ள 5 ஏவுகணை மட்டுமே ஹைஃபா நகரில் விழுந்துள்ளது.
இராணுவ மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான எலிஜா மேக்னியர், ஹைஃபா மீதான தாக்குதல் மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார், ஏனெனில் இது இஸ்ரேல் நாட்டின் கடற்படை தளம் மட்டுமல்ல, ரசாயனத் தொழில் துறையும் இங்கு தான் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பெய்ரட் நகரில் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட விபத்து நினைவிருக்கும், தற்போது இந்த கெமிக்கல் தொழிற்சாலையில் தாக்குதல் நடந்தால் இதைவிட அதிகமாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் எப்போதும் இல்லாத வகையில் துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது, இஸ்ரேல் ராணுவத்திற்கு புது விதமானதாக உள்ளது. எப்போதும் எல்லையில் தான் இரு தரப்புக்கும் தாக்குதல் நடக்கும். ஆனால் இந்த முறை இஸ்ரேல்-க்கு பொருட்சேதம் தாண்டி வர்த்தக பாதிப்பையும் அதிகரிக்க இத்தகைய பணிகளைச் செய்துள்ளது.
இஸ்ரேல் எல்லையில் இருக்கும் யூதர்கள் தினமும் ஏவுகணை பார்த்து வந்தாலும், ஹைஃபா-வில் வசிப்பவர்கள் நகருக்குள் ராக்கெட்டுகள் தரையிறங்குவதைப் பார்ப்பது இதுவே முதல் முறை. வடக்கு இஸ்ரேலில் துறைமுக நகரமாகவும், இந்நாட்டிற்கு கேட்வே ஆகவும் விளங்கும் ஹைஃபா நகரம் சுமார் 300,000 மக்களைக் கொண்ட ஒரு நகரமாகும்.
ஹைஃபா நகரத்தில் துறைமுகங்களைத் தாண்டி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தொழில்துறை வளாகங்களையும் கொண்டுள்ளது. இதனால் எதிர் நாடுகளுக்கு ஹைஃபா தற்போது ஒரு பிரதான இலக்காகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications