உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருக்கும் சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி திட்டம் மக்கள் போராட்டத்தின் காரணமாக நீக்கப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே கொரோனா தொற்று எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுப் பயன் அளிக்காமல் தினமும் 5000 பேர் மரணம் அடைந்து வருவதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் படுத்துச் சிகிச்சை பெற்று வரும் வீடியோ மனதை பதற வைக்கிறது.
இந்த நிலையில் சீனா முழுவதும் எலுமிச்சை பழத்திற்குத் திடீரென அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
சீனா
சீனாவில் ஜனவரி மாதம் முடிவிற்குள் 3.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் சீன மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளத் தற்போது எலுமிச்சை பழத்தைத் தேடி அலைந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுப் பாதிப்பைக் கட்டுப்படுத்து சீனா உருவாக்கிய வேக்சின் ஆரம்பம் முதல் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், பலர் இதை எடுத்துக்கொள்ள மறுத்தனர், ஆனால் காலப்போக்கில் அனைவரும் இந்த வேக்சின் எடுத்துக்கொண்டனர். ஆனாலும் மீண்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு பெரிய அளவில் மக்களைத் தாக்கியுள்ளது.
சீன மக்கள்
இந்த நிலையல் சீன மக்கள் இயற்கை மருந்துகள் மூலம் தங்களைக் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடிவு செய்த காரணத்தால் எலுமிச்சை பழத்திற்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
டிமாண்ட்
முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன மக்கள் மத்தியில் எழுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ள காரணமாகச் சீனாவின் பல மாகாணங்களில் எலுமிச்சையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகச் சீன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை முறையில் தங்களைத் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எலுமிச்சையை அதிகளவில் வாங்க திட்டமிட்டு உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
மக்கள் தங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் -களை பெறவும் இயற்கையான பொருட்களை நாடுகிறார்கள். இதன் விளைவாக அரைக் கிலோ எலுமிச்சை 2 அல்லது 3 யுவான் விற்கப்பட்ட நிலையில் இப்போது இரண்டு மடங்கு விலையில் சுமார் 6 யுவான் விற்கப்படுகிறது.
ஆரஞ்சு மற்றும் பேரிக்காய்
இதேபோல் ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட பிற பழங்களின் விற்பனையும் அந்நாட்டின் பழம் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் ஈகாமர்ஸ் தளமான Dingdong Maicai தளத்தில் அதிகரித்துள்ளது. இதோடு மஞ்சள் நிற பீச் பழத்திற்கும் அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
42 லட்சம்
சீனாவில் இருக்கும் தற்போதைய நிலை தொடர்ந்தால் கட்டாயம் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 42 லட்சமாக உயரும். ஆனால் சீனா அரசு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஜீரோ கோவிட் பாலிசியைக் கட்டுப்படுத்தினால் இந்த எண்ணிக்கை குறையலாம்.
லாக்டவுன்
இதேபோல் விரைவில் சீன அரசு தொற்று நிறைந்த பகுதிகளில் லாக்டவுன் விதிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.தினமும் 5000 பேர் உயிரிழக்கும் நிலையில் அரசு கட்டாயம் முக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications