இந்தியாவில் பல வர்த்தகங்களை ஸ்டார்ட்அப் மற்றும் ஈகாமர்ஸ் மூலம் சென்ட்ரலைஸ்டு ஆகியிருப்பது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவும் துவங்கியுள்ளது. அப்படி இந்தியாவில் மூக்கு கண்ணாடி, கூலிங் கிளாஸ் விற்பனையில் பெரிய பிராண்டுகளே இல்லாமல் இருந்த நிலையில் லென்ஸ்கார்ட் மொத்தமாக அனைத்தையும் மாற்றியது.
ஆன்லைன் கண்ணாடி பிராண்டான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் வெற்றி பலரையும் வியக்க வைத்துள்ளது மட்டும் அல்லாமல் கடந்த சில வருடங்களாக இதன் ஆதிக்கம் மற்றும் வருவாய் அதிகரிக்க துவங்கியுள்ளது. லென்ஸ்கார்ட் வளர்ச்சி பல முன்னணி பிராண்டுகளை கலங்கடித்துள்ளது என்பது உண்மை.

இந்த நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின இணை நிறுவனரான பெயுஷ் பன்சால், டெல்லியின் மிகவும் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான நீதி பாக் பகுதியில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் செட்டிலாகியிருக்கும் முக்கிய சிஇஓ பட்டியலில் பெயுஷ் பன்சால்-ம் இணைந்துள்ளார்.
பெயுஷ் பன்சால் வாங்கிய வீடு சுமார் 5,056 சதுர அடி, அதேபோல் இந்த சொத்தின் மொத்த பரப்பளவு 10,111.7 சதுர அடி பரப்பளவில் இந்த 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து நீதி பாக்-ல் அமைந்துள்ளது. பெயுஷ் பன்சால் இந்த பங்களாவை சுரீந்தர் சிங் அத்வால் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். பத்திர பதிவு கட்டணமாக மட்டுமே 1.08 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்.
பெயுஷ் பன்சால் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் Shark Tank நிகழ்ச்சியில் குறிப்பிட்ட காலம் இருந்தார். இதில் தற்போது புதிதாக OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் இணைந்துள்ளார். பெயுஷ் பன்சால் டெல்லி வீட்டை மே 2023ல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கௌதம் அதானி முதல் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா வரையில் சொந்த வீட்டை வாங்கி செட்டில் ஆனோர் எண்ணிக்கை மிகவும் அதிகம். டெல்லி அரசியல் பெரும் தலைகள் மட்டும் அல்லாமல் பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களின் தலைவர்கள் டெல்லியில் ஏராளம்.


Click it and Unblock the Notifications