இந்தியாவில் மூக்குகண்ணாடி வர்த்தகத்தை ஒரு லைப்ஸ்டைல் வர்த்தமாக மாற்றியது மட்டும் அல்லாமல் ஒரு வகைப்படுத்தப்படாத துறையை முற்றிலுமாக மாற்றி இன்று நாட்டின் மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ரத்தன் டாடா ஆரம்பக்கட்டத்தில் முதலீடு செய்தார், 2021ல் இந்த முதலீட்டில் கிடைத்த பங்குகளை விற்பனை செய்து 28 மடங்கு லாபத்தை பெற்றார்.
லென்ஸ்கார்ட் ஐபிஓ துவங்கும் முன் டிமார்ட் நிறுவனரும், பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனி சுமார் 90 கோடி ரூபாய் முதலீடு செய்து ப்ரோமோட்டர்களிடம் இருந்து நேரடியாக பங்குகளை பெற்றார். இதோடு பல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த லென்ஸ்கார்ட் ஐபிஓ-வில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் லென்ஸ்கார்ட் ஐபிஓ-வில் பல சர்ச்சைகள் நாளுக்கு நாள் வெடித்து வருகிறது, இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட நிதி அறிக்கையில் லாபம் பெற்றதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த லாபம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை விற்பனை செய்தது மூலம் கிடைத்த பிற வருமானமாக உள்ளது. இதேபோல் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு மத்தியில் லென்ஸ்கார்ட் பங்குகள் கிரே மார்க்கெட்டில் எப்படி செயல்படுகிறது என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
Lenskart Solutions Ltd-ன் IPO, இரண்டாவது நாளான நவம்பர் 3, 2025 அன்று 2.02 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை நடைபெறும் இந்த ஐபிஓ-விற்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. லென்ஸ்கார்ட்-ன் ஐபிஓ விலை அளவு ரூ.382 முதல் ரூ.402 வரையில் உள்ளது.
IPO சப்ஸ்கிரிப்ஷன் நிலை மற்றும் GMP பகுப்பாய்வு
இரண்டாவது நாளில் Lenskart IPO 2.02 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்ற நிலையில் இதன் கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) ரூ.59 என்ற நிலையில் உள்ளது. ஐபிஓ-வின் அப்பர் பேன்ட் விலை அளவு ரூ.402-ஐ கருத்தில் கொண்டு, பட்டியலிடும் விலை ரூ.461 என்று கணிக்கப்படுகிறது. இது IPO விலையை விட 14.68 சதவீதம் அதிகமாகும் என லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.
கடந்த 9 வர்த்தக அமர்வுகளில் GMP ரூ.48 முதல் ரூ.108 வரையிலான ஏற்ற இறக்கத்தை பதிவு செய்தது. தற்போதைய 59 ரூபாய் அளவை பார்க்கும் போது இந்த பங்கிற்கான மவுசு குறைவது தெரிகிறது. இந்த கிரேமார்கெட் விலை தான் முதலீட்டாளர்களின் IPO விலையை விட அதிகம் செலுத்த தயாராக இருப்பதை காட்டுகிறது. இந்த போக்கு, Lenskart-ன் வளர்ச்சி கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. ஆனால் இந்த உயர்வு நீண்டிக்குமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
லென்ஸ்கார்ட் ஐபிஓ ஒதுக்கீடு
Lenskart IPO-வில் 75 சதவீதம் பங்குகள் தகுதியான நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIBs), 15 சதவீதம் அளவு நிறுவன அல்லாத முதலீட்டாளர்களுக்கு (NIIs), 10 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியான ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.19 தள்ளுபடி உண்டு. இந்த அனைத்து பிரிவு முதலீட்டாளர்களை உள்ளடக்கி தான் லென்ஸ்கார்ட் IPO-வின், இரண்டாவது நாளான நவம்பர் 3, 2025 அன்று 2.02 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது.
Lenskart IPO பங்கு ஒதுக்கீடு நவம்பர் 6 அன்று முடிவடையும். நவம்பர் 7 அன்று பங்குகள் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் கிரெடிட் ஆக துவங்கும். BSE மற்றும் NSEயில் நவம்பர் 10 அன்று பட்டியலிடப்படும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications