கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் வளாகத்தில் சிறுத்தை புகுந்ததை தொடர்ந்து, இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் நிறுவனம் மற்றும் உள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இமெயில் மூலம் அந்த வொர்க் ப்ரம் ஹோம் அறிவிப்பை வெளியிட்டு, வளாகத்தில் சிறுத்தை இருப்பதை தெரிவித்து, பாதுகாப்பு காரணமாக அனைவரும் இன்று வீட்டில் இருந்தே பணியாற்ற வலியுறுத்தியது.

மேலும் இன்போசிஸ் மைசூர் வளாகத்திற்குள் எந்த ஊழியர்களுக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்பதை திட்டவட்டமாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர்.
காலை 2 மணி அளவில் சிசிடிவி காட்சிகளில் சிறுத்தை பதிவானதாக வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். காலை 4 மணி அளவில் அங்கு வனத்துறை அதிகாரிகளும், இன்போசிஸ் மைசூர் வளாகத்தின் முன்நிலையில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர், ஆனால் சிறுத்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வனவிலங்கு பிரிவின் துணை வன பாதுகாவலர் ஐ.பி.பிரபு கவுடா தெரிவித்தார்.
சிறுத்தை இன்போசிஸ் மைசூர் கேம்பஸ்-க்குள் நுழைந்துள்ள வேளையில், இன்ஃபோசிஸ் குளோபல் எஜுகேஷன் சென்டரில் பணிபுரியும் சுமார் 4,000 டிரைனி ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் விடுதிகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மைசூர் கேம்பஸ்-ல் டிரைனிங் எடுத்து வரும் இன்போசிஸ் ஊழியர்களுக்கான பயிற்சிகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications