இந்தியாவில் எல்ஜி நிறுவனம் முன்னணி மின்னணு சாதன விற்பனை நிறுவனமாக இருக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த இந்நிறுவனம் இந்தியாவில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமாக இருக்கும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது . இதன் மூலம் 1.5 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டுவது என எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் எல்ஜி நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐபிஓ வெளியீடு செய்து அதில் கிடைக்கும் தொகையின் மூலம் நிறுவனத்தை பெரிது படுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஐபிஓ வெளியீடு செய்வதற்காக எல்ஜி நிறுவனம் அமெரிக்கன் கார்ப்பரேஷன், சிட்டி குரூப், ஜே பி மார்கன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு இந்த ஐபிஓ வெளியீடு நடைபெறும் என சொல்லப்படுகிறது . இந்த ஐபிஓ மூலம் எல்ஜி நிறுவனம் 1.5 பில்லியன் டாலர்கள் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எல் ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 13 பில்லியன் டாலர்களாக உயரும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே எல்ஜி நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்வது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் தான் தற்போது வங்கிகளுடன் இந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்திருக்கிறது. அடுத்த மாதத்திற்குள் இந்த நிறுவனம் தங்களுடைய ஐபிஓ ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
செபி இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு எல்ஜி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட உள்ளது . எல்ஜி நிறுவனம் இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் தங்களுடைய வருமானத்தை 75 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்த வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எல்ஜி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதி தான் ஐபிஓ வெளியீடு செய்வது என தெரியவந்துள்ளது. இந்திய சந்தை பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. கூடிய விரைவில் ஹூண்டாய் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு செய்து இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முடிவு செய்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications