சீன ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான டீப்சீக், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓபன்ஏஐ, ஜெமனி போன்ற முன்னணி ஏஐ மாடல்களை காட்டிலும் சிறப்பாக இயங்கும் திறனுடனும், மலிவான கட்டணத்துடன் இயங்கும் ஏஐ மாடலாக உருவாக்கப்பட்டு உள்ள டீப்சீக் அமெரிக்க பங்குச்சந்தையை இன்று ரத்தகளறியாக மாற்றியுள்ளது.
என்விடியா 12 சதவீதமும், மைக்ரோசாஃப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ் மற்றும் கூகிள்-ன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் 2.2% முதல் 3.5% வரையிலும், ஜி.இ. வெர்னோவா மற்றும் விஸ்ட்ரா போன்றவை 20 சதவீதமும், AI சர்வர் தயாரிப்பாளர்களான டெல் டெக்னாலஜிஸ் மற்றும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் ஆகியவை 7.2 சதவீதம் மற்றும் 8.9 சதவீதம் சரிந்தன.

அமெரிக்க நேரப்படி காலை வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ் இன்டஸ்ட்ரியல் ஆவ்ரேஜ் 275.4 புள்ளிகள், எஸ்&பி 500 132.2 புள்ளிகள் மற்றும் நாஸ்டாக் காம்ப்சிட் 720.3 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதன் மூலம் அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு பெருமளவு சரிந்து முதலீட்டாளர்கள் கதற துவங்கியுள்ளனர்.
சீன நிறுவனமான டீப்சீக உருவாக்கிய ஓப்பன்-சோர்ஸ் ஏஐ மாடல் டீப்சீக்-ஆர்1 ஐ வெளியிட்டதன் மூலம் இந்நிறுவனம் உலகளாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்க ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஏஐ செயலியாக உருவெடுத்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க ஏஐ மாடலான டீப்சீங் உருவக்கியவர் தான் லியாங் வென்ஃபெங்.
யார் இந்த Liang Wenfeng?
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான லியாங் வென்ஃபெங் (Liang Wenfeng) நிறுவிய டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. ஹெட்ஜ் பண்ட் துறையில் தனது ஆழமான அனுபவத்தை கொண்டு, லியாங் வென்ஃபெங், டீப்சீக்கை ஒரு இன்டிபென்டென்ட் ஏஐ ரிசர்ச் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.
டீப்சீக், மற்ற ஏஐ நிறுவனங்களைப் போல பெரிய நிறுவனங்களின் ஆதரவை நம்பியிருக்கவில்லை, உதாரணமாக ஓபன்ஏஐ தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நம்பி தான் இயங்கி வருகிறது. ஆனால் டீப்சீக் அப்படியில்லை, இது லியாங் வென்ஃபெங்கின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான ஹை-ஃப்ளையர் மூலம் முழுமையாக நிதியுதவி செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் காரணமாக, டீப்சீக் தனது ஆராய்ச்சியில் முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறது மற்றும் நீண்ட கால நோக்கில் செயல்பட உள்ளது.
Liang Wenfeng வாழ்க்கை, கல்வி
1985 ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாணத்தின் ஜாங்ஜியாங்கில் பிறந்த லியாங் வென்ஃபெங் சிறப்பான கல்வி அடிப்படையை கொண்டுள்ளார். அவர் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் இன்பர்மேஷன் இன்ஜினியரிங்-ல் இளங்கலைப் பட்டம் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
Liang Wenfeng முதல் முயற்சி தோல்வி
லியாங் வென்ஃபெங் பட்டம் பெற்ற பின்னர், சிச்சுவான் மாகாணத்தின் செங்க்டு-வுக்குச் சென்ற அவர், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை பல்வேறு வகையில் பயன்படுத்த ஆராய்ந்தார், ஆனால் ஆரம்பத்தில் பெரிய வெற்றியை அவரால் சுவைக்க முடியவில்லை.
Liang Wenfeng சுவைத்த முதல் வெற்றி
இருப்பினும், லியாங் வென்ஃபெங் தனது முன்னேற்ற பாதைய கண்டறிந்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் நிங்கபோ ஹை-ஃப்ளையர் (Ningbo High-Flyer) என்ற ஒரு குவான்டிடேட்டிவ் முதலீட்டு நிறுவனத்தை இணைந்து நிறுவினார், இது கணிதம் மற்றும் ஏஐயைப் பயன்படுத்தி சிக்கலான முதலீட்டு உத்திகளை உருவாக்குகிறது. இந்த வெற்றி அவருக்கு ஏஐ ஆராய்ச்சிக்கு தனது ஆர்வத்தைத் தொடர தேவையான நிதி ஆதாரத்தையும், நிபுணத்துவத்தையும் வழங்கியது.
Liang Wenfeng ஆட்டம் துவங்கியது
ஹை-ஃப்ளையரின் கீழ் இயங்கும் ஒரு இன்டிபென்டென்ட் நிறுவனமான டீப்சீக், ஏஐ உலகில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதன் முன்னணி மாடலான டீப்சீக்-ஆர்1 மற்றும் டீப்சீக்-ஆர்1-ஜீரோ போன்ற அதன் மாடல்கள் பல்வேறு அளவுகோல்களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
டீப்சீக் டீம்
பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்வா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற சீன பல்கலைக்கழகங்களின் திறமையான இளம் பட்டதாரிகள் டீப்சீக்கின் பணியாளர்களாக உள்ளனர்.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications