லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு நல திட்டங்களையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் மிகவும் முக்கிய நடவடிக்கையாக எல்ஐசி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு, மீண்டும் பணியில் நியமனம் செய்யப்பட்ட முகவர்களுக்கான கமிஷன் ரினீவல், டர்ம்ப் காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய அறிவிப்புகள் இதில் அடங்கும்
மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் இருக்கும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்களும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எல்ஐசி நிறுவன ஊழியர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் எல்ஐசி நிறுவனம் இந்தியாவில் தனது காப்பீட்டு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவிலும், ஆழமாகவும் விரிவாக்கம் செய்ய உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த நல திட்டங்களில் முக்கியமாக எல்ஐசி ஏஜெண்ட்களுக்கான கிராஜூவிட்டி அளவு 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர உள்ளது. இதன் மூலம் எல்ஐசி ஏஜெண்ட்களின் நலன்கள் மற்றும் பணியாற்றும் சூழல் மேம்படும் என நிதியமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்ஐசி முகவர்கள் தற்போது பழைய ஏஜென்சியின் கீழ் முடிக்கப்பட்ட எந்தவொரு வணிகத்திற்கு ரினிவல் கமிஷன் பெற தகுதியற்றவர்களாக அறிவித்துள்ளது. ஆனால் புதிய நடவடிக்கையின் கீழ் மீண்டும் நியமிக்கப்படும் முகவர்கள் ரினிவல் கமிஷனுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் முகவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், எல்ஐசி ஏஜெண்ட்களுக்கான டேர்ம் இன்சூரன்ஸ் தற்போதைய ரூ.3,000-10,000 அளவில் இருந்து ரூ.25,000-1,50,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த டேர்ம் இன்சூரன்ஸின் உயர்வு மூலம் இறந்த முகவர்களின் குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி ஊழியர்களின் நலனுக்காக குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் என்ற சீரான விகிதத்தில் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்புதிய அறிவிப்புகள் அனைத்தும் ஊழியர்களுக்கும், எல்ஐசி ஏஜெண்ட்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.
இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் 0.49 சதவீதம் சரிந்து 663.45 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications