பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி (LIC) தனது செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இந்த காலாண்டு அறிக்கையில் அதன் ஓருங்கிணைந்த நிகர லாபம் 15,952 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1433 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 682.9 கோடி ரூபாயாக இருந்தது.
பிரீமிய வருவாய்
எல்ஐசி-யின் நிகர பிரீமிய வருவாய் 27% அதிகரித்து, 1.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில் முதல் ஆண்டு பிரீமியம் 11% அதிகரித்து, 9124.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8198.30 கோடி ரூபாயாக இருந்தது. தொடர்ந்து வணிக வளர்ச்சியானது மேம்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய்
இது புதுபிக்கப்பட்ட பிரீமிய வளர்ச்சி விகிதமானது 2% அதிகரித்து, 56,156 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஒற்றை பிரீமிய வசூலானது 62% அதிகரித்து, 66,901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் நிகர வருவாயில் முதலீட்டின் பங்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 10% அதிகரித்து, 84,104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வாரக்கடன்
எல்ஐசி-யின் மொத்த செயல்படாக் கடன் மதிப்பு (NPA) செப்டம்பர் காலாண்டில், 26,111 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைஅய் காலாண்டில் 26,619 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டில் 28,929 கோடி ரூபாயாக இருந்தது.
இதே மொத்த வாரக்கடன் விகிதமானது 5.60% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 6.57% ஆக இருந்தது. இதுவே ஜூன் காலாண்டில் 5.84% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
என்.எஸ்.இ-யில் எல்ஐசி பங்கின் விலையானது 1.10% அதிகரித்து, 627.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 633.65 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 625.05 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.17% அதிகரித்து, 628.05 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 633.55 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 624.90 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 588 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications