இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இன்று மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. எல்ஐசி தனது கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு குறித்த நாளில் குறித்த லாபத்தை அளிக்க வேண்டும் என்றால் அதன் முதலீடுகள் போதுமான லாபத்தை கொடுக்க வேண்டும். இதற்காக முதலீட்டு முடிவுகளை எடுக்கவும், அது எதிர்காலத்தில் ஆபத்து இல்லாமல் இருக்கவும் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் உயர்மட்ட மற்றும் முதலீட்டு கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்து 2 முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளது நிர்வாகம். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆபிசர், சீஃப் ரிஸ்க் ஆபிசர் பதவியில் இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா ரத்னாகர் பட்நாயக் என்பவரை தலைமை முதலீட்டு அதிகாரியாக நியமித்துள்ளது. ரத்னாகர் பட்நாயக் ஏப்ரல் 10 முதல் தனது பணியை துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் CIO ஆக இருந்த பிஆர் மிஸ்ரா-வுக்கு பதிலாக பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் பிஆர் மிஸ்ரா ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது மட்டும் அல்லாமல் ஏப்ரல் 10 ஆம் தேதி தப்ளேஷ் பாண்டேவுக்குப் பதிலாக PC Paikray-வை சீஃப் ரிஸ்க் ஆபிசர்-ஆக நியமிக்கப்பட்டார். இவரும் ஏப்ரல் 10ஆம் தேதி பொறுப்பேற்றார். ஒரே நேரத்துல சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆபிசர், சீஃப் ரிஸ்க் ஆபிசர் மாற்ரறப்பட்டு உள்ள நிலையில் புதிய கொள்கைகள் முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் எல்ஐசி முதலீட்டாளர்கள் எல்ஐசி செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரத்னாகர் பட்நாயக் இன்சூரன்ஸ் துறையில் 32 வருட அனுபவம் கொண்டவர். இவர் செப்டம்பர் 1990 இல் எல்ஐசியில் நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரியாக சேர்ந்தார், 4 முக்கிய பகுதிகளில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் தற்போது படிப்படியாக உயர்ந்து சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆபிசர் ஆக உயர்ந்துள்ளார்.

சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆபிசராக தற்போது பணியாற்றி வரும் பிஆர் மிஸ்ரா இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு பிரிவிலும், பதவியிலும் நியமிக்கப்பட உள்ளார். 1990 இல் எல்ஐசியில் நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரியாக சேர்ந்த PC Paikray தற்போது சீஃப் ரிஸ்க் ஆபிசர் ஆக உயர்ந்துள்ளார்.
இந்திய மக்கள் தங்களுடைய பாதுகாப்பான எதிர்காலத்திற்காக எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். எல்ஐசி தன்னிடம் இருக்கும் பணத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக அதானி குழுமத்தில் சுமார் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு எல்ஐசி தொடர்ந்து அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது, பிப்ரவரி மாதத்தில் எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்த தொகையை காட்டிலும் இதன் முதலீட்டு மதிப்பு குறைந்தது மறக்க முடியாது.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications