LIC- க்கு இது நல்ல காலம் தான்.. நெருக்கடியிலும் 64 வருடங்களில் இல்லாத அளவு லாபம்..!

அதில் இன்சூரன்ஸ் துறையும் ஒன்று. இதன் காரணமாக இன்சூரன்ஸ் துறையில் உள்ள நிறுவனங்கள் நல்ல லாபத்தினையும் கண்டுள்ளன.

நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த எட்டு மாதங்களில் பங்குகளை விற்பனை செய்வதில் இருந்து, இதுவரை இல்லாத அளாவுக்கு 25,908 கோடி ரூபாய் லாபத்தினை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பதிவு செய்துள்ளதாக உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஓவுக்காக தயாராகி வருகின்றது

ஐபிஓவுக்காக தயாராகி வருகின்றது

அதுமட்டும் அல்ல, பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான இது, மிகப்பெரிய பொது பங்கு வெளியீட்டுக்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எல்ஐசி-யின் லாபம் பங்கு விற்பனை மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு 25,908 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனை மூலம் வருமானம்

பங்கு விற்பனை மூலம் வருமானம்

இதன் லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 66.3% அதிகரித்து, 15,578 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது அதன் முழு நிதியாண்டு இலக்கான 32,000 கோடி ரூபாயில் 80% மேலாகும். இந்த பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனம் 64 வருட வரலாற்றில், பங்கு முதலீடுகள் மூலம் அதிக வருமானத்தினை ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

சந்தைகள் மீண்டு எழுந்து வரும் நிலையில், இது அதிக லாபத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் 1 முதல் 56.4% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்ஐசியின் ஈக்விட்டி போர்ட்போலியோ சாதனை லாபத்தினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாலிசி வர்த்தகம்

பாலிசி வர்த்தகம்

அதே போல எல்ஐசியில் புதிய தனி நபர் பாலிசி மற்றும் குழும பாலிசி வர்த்தகமானது, ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் 22.4% அதிகரித்து, 95,840 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளது. பங்கு விற்பனை மூலம் அதிக லாபத்தினை பதிவு செய்துள்ள நிலையில், எல்ஐசி பங்கு வெளியீட்டில் ஆர்வத்தினை அதிகரிக்ககூடும்.

பங்கினை வாங்குதல்

பங்கினை வாங்குதல்

எல்ஐசி-யின் போர்ட்போலியோவில் முதல் 15 நிறுவனங்களில், ஐடிசி, என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில் இந்தியா, பிரிட்டானியா, ஏபிபி மற்றும் டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த பங்குகளில் எல்ஐசி 13,710 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிகிறது. 2021ம் நிதியாண்டில் பங்கு வாங்குவது 77,000 கோடி ரூபாய்க்கு மேலாக செல்லும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வளவு பங்கு?

எவ்வளவு பங்கு?

கடந்த நிதியாண்டில் எல்ஐசி நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் 61,590.02 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தது. இன்னும் இந்த நிதியாண்டு முடிய இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், எல்ஐசி 60,574.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டில் 40,098.83 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மட்டுமே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்கள் முடக்கம்

சில மாதங்கள் முடக்கம்

எல்ஐசி நடப்பு நிதியாண்டின் முதல் சில மாதங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அதன் பாலிசி விற்பனையும் முடங்கியது. எனினும் அதன் பிறகு எல்ஐசி அதன் விற்பனை ஆன்லைன் மூலமாகவும் ஏஜெண்டுகள் மூலமாகவும் விற்பனையை செய்தது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பீரிமியம் வளர்ச்சி 10.5% அதிகரித்தது. மீண்டும் புதுபித்தல் வருமானம், கடந்த ஆண்டை காட்டிலும் 11% ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+