இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈக்விட்டி முதலீட்டின் மூலம் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கையில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், கடந்த 2021ம் நிதியாண்டில் ஈக்விட்டி முதலீட்டின் மூலம் 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாபம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டினை காட்டிலும் 44.4% அதிகரித்து, 37,000 கோடி ரூபாயினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 25,625 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி எவ்வளவு முதலீடு
எல்ஐசி நிறுவனம் உள்நாட்டில் முதலீடு செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஈக்விட்டி சந்தையில் 94,000 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது. அதோடு 34 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்தினையும் நிர்வகிக்கிறது. எல்ஐசியின் இந்த அறிவிப்பானது பாலிசிதாரர்களுக்கு மிக நல்ல விஷயமாகும்.
நல்ல போனஸ் கிடைக்கும்
ஏனெனில் பாலிசிதாரர்கள் சிறந்த போனஸ் மற்றும் வருமானம் பெறுவார்கள். அதோடு அரசாங்கத்திற்கும் அதிகப்படியான டிவிடெண்டும் கிடைக்கும். இது அரசாங்கம் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் மிக பயனுள்ளதாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்தினை கண்டதையடுத்து லாபம் கண்டுள்ளதாகவும் எல் ஐ சி அறிவித்துள்ளது.
பலத்த சரிவு
இந்திய பங்கு சந்தையானது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 4 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்தது. எனினும் அதன் பின்னர் நல்ல ஏற்றத்தினையும் கண்டது. இதுவே எல்ஐசி இந்த அளவுக்கு லாபத்தினை பதிவு செய்ய காரணமாக அமைந்தது. இது குறித்து எல்ஐசி லாபத்தினை பெற நிறுவனங்களுக்குள் நுழைவதும், வெளியேறுவதற்கும், வளர்ந்து வரும் சந்தைகளை பயன்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
எந்தெந்த துறைகளில் முதலீடு
அதோடு நல்ல வருமானத்தினை தரக்கூடிய போர்ட்போலியோ முதலீடுகளை கொண்டுள்ளோம் என்று எல்ஐசியின் நிர்வாக இயக்குனர் முகேஷ் குமார் குப்தா கூறியுள்ளார். எல்ஐசி குறிப்பாக உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் சுரங்கம், ஹார்டுவேர், பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது கவனம்
மேற்கண்ட துறைகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில் நல்ல வளர்ச்சியினை கண்டன. இதனால் பங்கு சந்தைகள் எழுச்சியினை கண்டன. இதனால் எல்ஐசியும் நல்ல லாபத்தினை பதிவு செய்தது. மேலும் தற்போது எல்ஐசி பல புதிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதலீடுகள் குறைப்பு
தற்போது பல துறைகளில் முதலீடுகளை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 2020ல் உள்கட்டமைப்பு துறையில் 24,000 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, தற்போது 4,100 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. இதே ஐடி துறையில் 55,000 கோடி ரூபாயில் இருந்து, 11,600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் தற்போது மருத்துவ துறையில் முதலீட்டினை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 17,700 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 37,000 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications