நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC), கடந்த டிசம்பர் காலாண்டுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் Dr Lal PathLabs நிறுவனத்தின் பங்கினை வாங்கியுள்ளது.
இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் பங்கு விலையானது 20 நாட்கள், 50 நாட்கள், 200 நாட்கள் மூவிங் ஆவ்ரேஜ்ஜுக்கு மேலாகவும், இதே 5 நாள் மற்றும் 100 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 31,187 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எல்ஐசி
டாக்டர் லால் பாத் லேப்ஸ் நிறுவனத்தில், எல்ஐசி நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 1.12% அல்லது 9,31,246 பங்குகளை வாங்கியுள்ளது. இது இரண்டாவது காலாண்டில் எந்த பங்கினையும் வைத்திருக்கவில்லை. இதே போல மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமும் இது இரண்டாவது காலாண்டில் 3.26% அல்லது 27,17,883 பங்குகளாக இருந்தது. இதனை மூன்றாவது காலாண்டில் 3.34% அல்லது 27,82,681 பங்குகளாக அதிகரித்துள்ளது.
நிகரலாபம்
இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 10.6% அதிகரித்து, 96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 87.1 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் விகிதமானது 15.4% அதிகரித்து, 498.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 431.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
லேப் சேவை
டாக்டர் லால்பாத் லேப்ஸ் லிமிடெட் என்பது நோய் கண்டறிதல் மற்றும் அது தொடர்பான சுகாதார பரிசோதனைகளை செய்து வரும் நிறுவனமாகும். டெல்லியினை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ரத்தம் , சிறுநீர், பிற மனித உறுப்புகளை சோதனை செய்யும் ஒரு லேப் ஆகும்.
இன்றைய பங்கு விலை நிலவரம்
இதற்கிடையில் இன்று இந்த பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 1.41% அதிகரித்து, 3727.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 3769.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 3673.80 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இயில் இந்த பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 1.35% அதிகரித்து, 3722.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 3768.15 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 3677.15 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 4243 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2162 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications