அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில், மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள எல்ஐசி தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், சமூக ஊடக தளங்களில் எல்ஐசி பெயரில் மோசடியான மொபைல் ஆப் ஒன்று உலாவுவதாக எல்ஐசி எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்ஐசி ஆஃப் இந்தியா என்ற பெயரில் மோசடியான மொபைல் அப்ளிகேஷன்கள் புழக்கத்தில் விடப்படுவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், எனவே அனைத்து பாலிசிதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இந்தியாவின் அதிகாரப்பூர்வ எல்ஐசி இணையதளம் (www.licindia.in) அல்லது எல்ஐசி டிஜிட்டல் ஆப் மற்றும் எங்கள் இணையதளமான www.licindia.in இல் கிடைக்கும் பிற அங்கீகரிக்கப்பட்ட / செல்லுபடியாகும் / சரிபார்க்கப்பட்ட நுழைவாயில்கள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த வகையில், எந்தவொரு மாற்று டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் செலுத்தப்படும் எந்தவொரு கட்டணத்திற்கும் இந்தியாவின் எல்ஐசி பொறுப்பேற்காது என்பதை அறிவுறுத்துவதாக கூறியுள்ளது.
அதேபோல், சமீபகாலமாக எல்ஐசி நிறுவனத்தின் பெயரில், "போலி விளம்பரங்கள்" இணையத்தில் வெளியாகி, பொதுமக்களை ஏமாற்றும் வேலையும் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. எல்ஐசியின் பெயர், அதன் இலச்சினை போன்றவற்றை சமூக ஊடகங்களில் அச்சு அசலாக பதிவிட்டு, எல்ஐசி நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் போலவே, போலியான விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, எல்ஐசி நிறுவனம் அந்த போலி நிறுவனங்களையும் கடுமையாக எச்சரித்திருந்தது. மூத்த அதிகாரிகள்: "எல்ஐசி பாலிசிதாரர்களும் மக்களும் இதுபோன்ற போலியான விளம்பரங்களின் உண்மை தன்மையை பரிசோதித்துவிட்டு அதன்பின் செயல்பட வேண்டும் என்று அறிவித்தது.
இது போன்ற ஏமாற்று வேலைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கவும் விரும்புகிறோம். எல்ஐசியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் இதுபோன்ற மோசடியான விளம்பரங்களின் இணைய இணைப்புகளைப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. அந்த வகையில், மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நாங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications