எல்ஐசி-யும், மத்திய அரசும் ஐடிபிஐ வங்கியும் தங்களின் 60.72% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.
கடந்த ஜுன் 30, நிலவரப்படி, ஐடிபிஐ வங்கியில் இருவரும் 94.70% பங்கினை வைத்திருந்தனர். இதில் மத்திய அரசு 45.48% பங்கினை வைத்துள்ளது. இதே எல்ஐசி-யின் வசம் 49.24% பங்கும் உள்ளது.
தகவல்கள் படி, மத்திய அரசின் வசம் உள்ள 30.48% பங்கும், எல்ஐசி வசம் உள்ள 30.24% பங்கும் விற்பனை செய்யப்படலாம் என தெரிகின்றது.
பொதுத்துறை டூ தனியார்மயம்
இந்தியாவில் பொதுத்துறை வங்கியினை தனியார் மயமாக்குவது இதுவே முதல் முறையாகும். தீபம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஐடிஐபி வங்கி பங்கினை வாங்க முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஐடிஐபி வங்கி பங்கினை வாங்க EOI-யினை தெரிவிக்க டிசம்பர் 16 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த EOI-கள் 180 நாட்களுக்கு செல்லும். இது மற்றொரு 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
தொழிற்துறை வங்கி
ஐடிபிஐ வங்கி மத்திய அரசால் கடந்த 1964ல் உருவாக்கப்பட்டது. இந்த வங்கி மூலம் தொழிற்துறைக்கு தேவையான நிதி கிடைக்க வழிவகுக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் வளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஆகியவற்றினால் பொதுமக்களினால், பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், 2005ல் வங்கியின் செயல்பாடுகள் மாற்றப்பட்டன.
மத்திய அரசின் இலக்கு
ஐடிபிஐ வங்கியின் இந்த பங்கு விற்பனை மத்திய அரசின் இலக்கில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பங்கு விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டினால், 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ஏற்கனவே எல்ஐசி பங்கு விற்பனை மூலம் 24,544 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் திட்டம்
மத்திய அரசு BEML, ஷிப்பிங் கார்ப், விஷாக் ஸ்டீல், ஐடிபிஐ வங்கி, என்எம்டிசி-யின் நகர்னார் ஸ்டீல் ஆலை, HLL லைஃப் கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இதனை நிதி நெருக்கடியாக அல்லாமல், சீர்திருத்த நடவடிக்கையாக முதலீட்டாளர்களை பார்க்குமாறும் கூறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications