அதானி குழுமம் - ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைக்கு மத்தியில் பல்வேறு தரப்பினரும், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி, எஸ்பிஐ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் இது குறித்து விளக்கம் கொடுத்தாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள சந்தேகம் என்பது குறையவில்லை எனலாம்.
இதற்கிடையில் இன்சூரன்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் குறைக்கவில்லை. மாறாக சந்தையில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் எல்ஐசியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விளக்கம் பெற திட்டம்
மேலும் அதானி குழுமத்துடன் இது குறித்த ஒரு கூட்டத்தை நடத்தி நெருக்கடி குறித்து விளக்கம் பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் சர்ச்சையானது, நிறுவனங்களுக்கு மத்தியிலான பிரச்சனை என்பதை தாண்டி, அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இதற்கிடையில் தான் எல்ஐசி நிறுவனத்தின் விளக்கமும் வந்துள்ளது.
எல்ஐசி முதலீட்டின் நிலை
எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனங்களில் 36,000 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்துள்ளது. இது அதானி குழுமத்தின் பல பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீட்டின் மதிப்பானது ஜனவரி 27 அன்று 56,142 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
உன்னிப்பாக கவனம்
கடந்த வியாழக்கிழமையன்று எல்ஐசி-யின் தலைவர் எம் ஆர் குமார், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து வருவதை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள அதானி நிர்வாகத்தினை அழைக்கும் என்றும் கூறியுள்ளார்.
வணிக விவரம் என்ன?
அவர்களின் வணிக விவரம் என்ன? அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள்? எப்படி முழு விஷயத்தினையும் நிர்வகிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் முழுமையாக கவனித்து வருகின்றோம். இது குறித்து அவர்களிடன் எப்போதாவது பேசுவோம் என்றும் குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் தயக்கம்
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானதை அடுத்து அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன. இதன் காரணமாக அதானி குழும முதலீட்டாளர்களும் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அன்னிய முதலீடுகளும் வெளியேற்றம் கண்டது. தற்போது திரும்ப அதானி குழுமத்தில் முதலீடுகளை திரும்ப செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர்.
எவ்வளவு"? என்னென்ன பங்குகள்?
எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சிறந்த பங்குகளாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக தற்போதில் இருந்து 1 - 3 ஆண்டுகளில் இப்பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கூறுகின்ற்னர்.
தற்போதைக்கு எல்ஐசி அதானி குழுமத்தில் 0.90% பங்கினை வைத்துள்ளது. இது அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ்ம் அதானி டோட்டல் கேஸ்ம் அதானி டிரான்ஸ்மிஷன், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி உள்ளிட்ட பங்குகள் போர்ட்போலியோவில் உள்ளன.
அதானி குழுமத்திடம் விளக்கம்
எல்ஐசி முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்டிருந்தாலும், உயர்மட்ட நிர்வாக குழுவினர் அதானி குழும நிர்வாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கவுள்ளதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது. இது எல்ஐசி முதலீட்டாளர்கள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications