இன்றைய காலத்தில் முதலீடு செய்வதற்கு தங்கம், ரியல் எஸ்டேட், காப்பீடு, பங்குகள் என பல வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் நீங்கள் புத்திசாலித்தனமாக மூதலீடு செய்தால் மட்டுமே உங்கள் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமையும்.
காப்பீட்டில் முதலீடு செய்வோம் என்று நீங்கள் முடிவு செய்தால், அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். நம் நாட்டு மக்கள் தங்களது காப்பீட்டு சேவைகளுக்கு நீண்ட காலமாக எல்ஐசியை நம்பி வருகின்றனர். எல்ஐசியும் மக்களுக்கு சிறந்த பாலிசிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் மக்களுக்கு சிறந்த பலன் அளிக்கும் எல்ஐசி தன் வர்ஷா 866 என்ற பாலிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரு அம்சங்கள் சேர்ந்து கிடைக்கும். எல்ஐசியின் தன் வர்ஷா 866 பாலிசி இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஆப்சன் 1: இதன்படி, பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டால் இறப்புக்கான உறுதியளிக்கப்பட்ட தொகையாக 1.25 மடங்கு டேபுலர் பிரீமியத்தை நாமினி பெறுவார். உதாரணமாக, ரூ.10 லட்சம் பிரீமியம் செலுத்தப்பட்டிருந்தால், துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது கணிசமான நிதி உதவியை உறுதி செய்யும் வகையில், திரட்டப்பட்ட உத்தரவாத கூடுதல் போனஸூடன் ரூ.12.5 லட்சத்தை நாமினி பெறுவார்.
ஆப்சன் 2: இதன்படி, இறப்புக்கான உறுதியளிக்கப்பட்ட தொகையின் 10 மடங்கு டேபுலர் பிரீமியம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் ரூ.10 லட்சம் பிரீமியமாக செலுத்தியிருந்தால், பாலிசிதாரர் எதிர்பாராத மரணம் சந்தித்தால், நாமினிக்கு உறுதி செய்யப்பட்ட போனஸூடன் ரூ.1 கோடி கிடைக்கும்.
பாலிசி எடுப்பதற்கான குறைந்தபட்ச வயது
15 ஆண்டு கால பாலிசி எடுப்பதற்கு 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
10 ஆண்டு கால பாலிசி எடுப்பதற்கு 8 வயது நிறைவாகி இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications