அட கொரோனா கட்டுப்பாட விடுங்க பாஸ்.. எல்ஐசி பிரீமியம் கட்ட கால அவகாசம் நீட்டிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக, 3,50,646 பேர் தாக்கம் அடைந்துள்ளதாகவும், 15,317 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 390 பேரினை தாக்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

 

மேலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, மக்கள் வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது என்றாலும், அது மக்களின் நலனுக்காக எனும் போது அதனை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.

 
அட கொரோனா கட்டுப்பாட விடுங்க பாஸ்.. எல்ஐசி பிரீமியம் கட்ட கால அவகாசம் நீட்டிப்பு..!

இதனை கருத்தில் கொண்டு எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இது இன்சூரன்ஸ் பிரீமியம் கட்ட இயலாதவர்கள் ஏப்ரல் 15 வரை கட்டலாம் என்று அறிவித்துள்ளது. அதாவது கால தாமதம் ஆகிவிட்டால் ஏப்ரல் 15-க்குள் அபராதமின்றி பிரீமியம் தொகையை செலுத்தலாம். அதேபோல் பிரீமியம் தொகையை ஆன்லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தி வருகிறது. மேலும் எல்ஐசி. ஆலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் எல்ஐசி காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பாலிசிக்கான பிரீமிய கட்டணத்தை உரிய தேதியில் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக இதனைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்காக புதிய சலுகையை LIC நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அதிரடி! பெட்ரோல் டீசல் மீதான சிறப்பு கலால் வரி வரம்பு ரூ.18 & ரூ.12 ஆக உயர்வு!மத்திய அரசு அதிரடி! பெட்ரோல் டீசல் மீதான சிறப்பு கலால் வரி வரம்பு ரூ.18 & ரூ.12 ஆக உயர்வு!

மேலும் இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் எல்ஐசி கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளோம்.

அதன்படி, பாலிசிதாரர்கள் அனைவரும் தங்கள் பாலிசியின் பிரீமியம் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசமாக ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைனில் செலுத்த முடியாத வாடிக்கையாளர்கள், முகவர்களிடம் வழங்க முடியாத வாடிக்கையாளர்கள், இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் இது போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இது வரவேற்கதக்க விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC extends premium payment deadline amid coronavirus spread

LIC extended the deadline for paying premium for policy holders amid the coronavirus pandemic.
Story first published: Monday, March 23, 2020, 19:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X