சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்தான பர பரப்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றது.
இந்த தீ விபத்தினை அடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிகிறது.
தீ விபத்து
இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள வீடியோக்காளில் எல்ஐசி-யின் மேல் பரப்பில் இருக்கும் பெயர் பலகையில் தீ கொழுந்து விட்டு எரிவதை காண முடிகிறது. இன்று வார விடுமுறை ஆதலால் ஆள்நடமாட்டம் பெரியளவில் இல்லததால் பெரிய பாதிப்பும் ஏதும் இல்லை என தெரிகிறது. எனினும் இந்த தீ விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்தான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
பழமையான கட்டிடம்
சென்னையின் மிகப் பழமையான அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடம், 15 மாடிக்களைக் கொண்டது. இந்த கட்டிடமும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையாகவும் உள்ளது.
இன்றும் சென்னையின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கட்டிடத்தின் மேலாக உள்ள மொட்டை மாடியில் தான் எல்ஐசி என்ற பெரிய பெயர் பலகையானது இருந்தது.
என்ன காரணம்?
இந்த பெயர் பலகையில் தான் திடீரென தீ பற்றி எரிவதை காண முடிகிறது. எனினும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பற்றி எரியாமல் தடுக்கும் விதமாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மொட்டை மாடியில் உள்ள பெயர் பலகையில் தீ பற்றி எரிந்ததால், பலகையில் இருந்த மின் கசிவு தான் காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. எனினும் இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
தொடர்ந்து 3வது முறை தீ விபத்து
இது குறித்தான தீவிர விசாரணையும் நடந்து வரும் நிலையில், இது குறித்தான வீடியோக்கள் போட்டோக்கள் என பலவும் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
இந்த எல்ஐசி கட்டிடத்தில் தீ பற்றி எரிவது இது முதல் முறை அல்ல. கடந்த 1975ம் ஆண்டு ஜூலை மாதமும் இதேபோல தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2012ம் ஆண்டிலும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications