லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஊழியர் யோகேஷ் கர்க் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் உட்பட மொத்தம் ஐந்து நபர்களுக்கு, மறு உத்தரவு வரும் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகளை வாங்கவோ, விற்கவோ அல்லது பரிவர்த்தனை செய்யவோ பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர் செபி தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு எல்ஐசி ஃப்ரண்ட்-ரன்னிங் தொடர்பானது, யோகேஷ் கர்க் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் செய்த மோசடிகள் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், ஐந்து நிறுவனங்களும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சுமார் 2.44 கோடி ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களைப் பறிமுதல் செய்துள்ளது. ஃப்ரண்ட்-ரன்னிங் என்பது என்ன..?

ஃப்ரண்ட்-ரன்னிங் என்பது பங்குச் சந்தையில் ஒரு சட்டவிரோத நடைமுறையாகும். ஒரு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவல் பகிர்வதற்கு முன்பு தரகர் அல்லது சந்தை ஆய்வாளர்களிடம் இருந்து முன் கூட்டியே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்து அதிகம் லாபம் பார்ப்பது தான்.
செபி உத்தரவில் யோகேஷ் கர்க், அவரது தாயார் சரிதா கர்க், அவரது மாமியார் கமலேஷ் அகர்வால், வேத் பிரகாஷ் HUF மற்றும் சரிதா கர்க் HUF ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பத்திரங்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பரிவர்த்தனை செய்யவோ பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர் செபி தடை விதித்துள்ளது. HUF என்பது பிரிக்கப்படாத இந்து குடும்பமாகும்.

வழக்கு வரலாறு : வேத் பிரகாஷ் கார்க்கின் மகனான யோகேஷ் கார்க், 2011 ஆம் ஆண்டு எல்ஐசியில் உதவி நிர்வாக அதிகாரியாக (ஏஏஓ) நியமிக்கப்பட்டார். அதன் பிறகு எல்ஐசியின் கொல்கத்தா, ரோஹ்தக் மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஏஏஓவாக பணியாற்றினார்.
அவர் மே 2019 முதல் ஏப்ரல் 2022 வரை மும்பையில் உள்ள எல்ஐசியின் முதலீட்டுத் துறையில் நிர்வாக அதிகாரியாக (ஏஓ) பணியாற்றினார். எல்ஐசியின் முதலீட்டு பிரிவானது முக்கியமான துறையாக கருதப்படுகிறது.
எல்ஐசியின் டீலராக இருக்கும் யோகேஷ் கார்க், எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மற்றும் பத்திரங்களை வாங்கும் / விற்பனை செய்யப்படும் ஆர்டர்களின் அளவு மற்றும் நேரம் குறித்த தகவல்கள் அவருக்கு தெரியும். இது பொது சந்தையில் அறிவிப்பதற்கு முன்பாக தனக்கு சதகமாக பயனபடுத்திக் கொண்டு உள்ளதாக செபி கூறியது.
இதற்கிடையில் எல்.ஐ.சி.யின் தற்போதைய செயல்முறைகளை மதிப்பாய்வு செய்யவும், அதன் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அதன் ஊழியர்களின் மோசடி, சூழ்ச்சி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், கண்டறியவும் மற்றும் சரிசெய்யவும் தேவையான அனைத்து கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் செபி அறிவுறுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications