LIC: எல்ஐசி ஹைவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1 வருடம் முதல் 5 வருடத்திற்கான வட்டி விகிதமானது 7.25% முதல் 7.75% வரையில் வழங்கப்படுகின்றது.
இந்தியாவின் முன்னணி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனமான எல்ஐசி ஹைவுசிங் பைனான்ஸ் லிமிடெட் 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பிரபலமான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தான் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 12 முதல் அமலுக்கு வந்துள்ளது. .

புதிய வட்டி அதிகரிப்பின் படி, 20 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 1 வருடத்திற்கான பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் என்பது 7.25 சதவீதமாகவும், 18 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.35 சதவீதமாகவும், இதே 2 ஆண்டுகளுக்கான டெபாசிட் விகிதம் என்பது 7.60% ஆகவும், 3 - 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7.75% ஆகவும் பெறலாம்.
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் 1 வருடம், 18 மாதங்கள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களில் முதிர்வு காலத்தின் மீதான அசல் தொகையுடன் கூடிய வட்டி விகிதத்தினை ஆண்டுதோறும் பெறலாம்.
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் கடந்த மே 2007ல் சஞ்சய் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு கிரிசில் AAA/Stable என மதிப்பீடு செய்தது.
எல்ஐசி-யின் இந்த திட்டத்தில் இந்திய குடிமகன்கள், HUFs, இந்திய குடிமகன் அல்லாதவர்கள், குழந்தைகள் சட்ட பூர்வ வாரிசுகளுடன் இணைந்தும் முதலீடு செய்யலாம். இது தவிர பல்வேறு கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்தும், தனி நபர் சங்கம், அறக்கட்டளைகள் மற்றும் பலராலும் செய்யப்படும் முதலீடுகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த சஞ்சய் டெபாசிட் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டில் 75% கடனாக பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுக்கு எளிதாக ஒப்புதல் பெறலாம். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.25 சதவீதம் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இதில் மூத்த குடிமக்கள் 20,000 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒருவர் 20,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 1000 ரூபாயின் மடங்கில் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மாதாந்திரம் அல்லது விருப்பத்திற்கு ஏற்பட வருடாந்திர வட்டி செலுத்தும் விருப்பம் உள்ளது. ஆக இது முதலீட்டாளார்களுக்கு ஒரு நெகிழ்வை கொடுக்கும் எனலாம்.
இந்த திட்டத்தில் செக் அல்லது RTGS/NEFT/IMPS பரிமாற்றம் மூலம் LICHFL இன் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி செலுத்தப்படும். அதேபோல செக் /ஆன்லைன் பரிமாற்றம் (RTGS/NEFT/IMPS) மூலம் மட்டுமே டெபாசிட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications