லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) புதன்கிழமை டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு இருப்பை புதிதாக முதலீடு செய்து அதிகரித்துள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் BFSI பிரிவின் தலைவரும், இன்போசிஸ் பிரெசிடென்ட் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையை பெற்றுள்ளது.
இதை உறுதி செய்யும் வரையில் இந்திய பங்குச்சந்தையில் பெரிய முதலீட்டாளராக இருக்கும் LIC நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் முதலீடு செய்து இதன் மொத்த பங்கு இருப்பை 8.88 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது எல்ஐசி நிர்வாகம்.

மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டு தரவுகளின்படி, எல்ஐசி நிறுவனம் டெக் மஹிந்திராவில் வைத்திருந்த 8.07 சதவீத பங்குகளை ஒப்பிடுகையில் தற்போது 81 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 8.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெக் மஹிந்திராவில் இனி வரும் காலத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிய வாய்ப்புகள் உள்ளது.
நவம்பர் 11, 2022 மற்றும் ஜூன் 6, 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் திறந்த சந்தையில் இருந்து எல்ஐசி நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் மூலம் அதன் பங்கு இருப்பு 2.015 சதவீத அதிகரித்துள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனம் சராசரியாக 1050.77 ரூபாய்க்கு டெக் மஹிந்திரா பங்குகளை வாங்கியுள்ளது.
டெக் மஹிந்திரா பங்குகள் இன்று 2.07 சதவீதம் சரிந்து 1,073 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் டெக் மஹிந்திரா பங்குகள் 6.26 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ 5G-as-a-Service என்ற புதிய சேவையை சிஸ்கோ உடன் இணைந்து உலகளாவிய தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5ஜி சேவை பிரிவில் விப்ரோ புதிய வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்களை பெற உள்ளது.
மேலும் டிசிஎஸ், இங்கிலாந்து நாட்டின் 2வது பெரிய பென்ஷன் நிறுவனமான Teachers' Pension Scheme-ன் 10 வருட நிர்வாக வர்த்தகத்தை பெற்றுள்ளது. Teachers' Pension Scheme-ன் தளத்தை டிஜிட்டல் சேவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய உள்ளது TCS BaNCS.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications