இந்தியாவின் முன்னணி காப்பீட்டு சேவை நிறுவனமான எல்ஐசி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் சாட் பாட்டை அறிமுகம் செய்திருக்கிறது. எல்ஐசி வாடிக்கையாளர்கள் இந்த சாட் பாட் சேவையை பயன்படுத்தி தங்களின் பாலிசிக்கான பேமென்ட்டை ஆன்லைன் வாயிலாகவே செலுத்திக் கொள்ளலாம் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி வாடிக்கையாளர்கள் 8976862090 வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி பாலிசி குறித்த தகவல்களையும் அதற்கான பேமென்ட்டையும் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாலிசியை தெரிந்து கொள்வது, அதற்கான பிரீமியம் கட்டும் தேதியை தெரிந்து கொள்வது, பிரீமியம் செலுத்துவது அதற்கான ரசீதை பெறுவது என அனைத்துமே இந்த சாட் பாட் வாயிலாகவே வந்து விடும் என எல்ஐசி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் செலுத்துவது எளிமையாக கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது எல்ஐசியின் கஸ்டமர் போர்ட்டலில் 2.2 கோடி பாலிசிதாரர்கள் பதிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் ஒவ்வொரு நாளும் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த கஸ்டமர் போர்டலில் லாகின் செய்து ஆன்லைன் சேவைகளை பெறுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்.

சாட் பாட்டை எப்படி பயன்படுத்துவது?
எல்ஐசி பாலிசிதாரர்கள் 8976862090 என்ற எண்ணிற்கு தங்களுடைய வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். இதனை அடுத்து புகைப்படத்தில் காட்டி இருப்பதை போன்ற ஒரு ஸ்கிரீன் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எல்ஐசி கஸ்டமர் போர்ட்டலில் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சாட்பாட்டை பயன்படுத்த முடியும்.
எல்ஐசி கஸ்டமர் போர்ட்டலில் எப்படி பதிவு செய்வது?
www.licindia.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Customer Portal என்பதை கிளிக் செய்ய வேண்டும், "New user"என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்களின் user id மற்றும் password தேர்வு செய்து சப்மிட் செய்ய வேண்டும். இந்த இரண்டும் கிரியேட் ஆன உடன் user id கொண்டு லாகின் செய்து 'Basic Services' - "Add Policy" ஆகியவற்றை கிளிக் செய்து பாலிசி எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் உங்களின் பாலிசி எண், உங்களின் பான் எண், பான் அட்டை புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பின் உங்களுக்கு பிரீமியம் சேவைகள் கிடைக்கும். சாட் பாட் சேவையும் எளிதாக கிடைத்துவிடும்.


Click it and Unblock the Notifications