அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?
 

அதானி குழுமத்தில் அதிகளவில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது அதற்கான விளக்கத்தையும் எல்ஐசி கொடுத்துள்ளது.

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையின் மத்தியில் அதானி குழும பங்குகள் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து, பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..? வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?

எல்ஐசி முதலீடு

எல்ஐசி முதலீடு

இந்த மோசமான காலகட்டத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடுகளின் நிலை என்னவாகும் என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் அதன் மொத்த சொத்து மதிப்பில், 1%க்கும் குறைவாக அதானி குழும நிறுவனங்களில் உள்ளது.

மொத்த கடன் & ஈக்விட்டி

மொத்த கடன் & ஈக்விட்டி

அமெரிக்காவின் ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது, அதானி குழும நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் கீழ் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி பங்கு மற்றும் கடனின் கீழ் எல்ஐசி-யின் மொத்த முதலீடு, 35,917.31 கோடி ரூபாயாக இருந்தது.

எவ்வளவு சரிவு?
 

எவ்வளவு சரிவு?

இந்த விகிதமானது ஜனவரி 27, 2023 அன்று அதானி குழும நிறுவனங்களின் மீதான முதலீடு மதிப்பு, 30,127 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஜனவரி 27, 2023 அன்று 56,142 கோடி ரூபாயாக இருந்தது. அதானி குழும நிறுவனத்தின் முதலீடு விகிதம் அந்த காலகட்டத்தில் 36,474.78 கோடி ரூபாயாக இருந்தது.

அதானியின் கடன் பத்திரம்

அதானியின் கடன் பத்திரம்

இந்த முதலீடுகள் அதானி குழுமத்தின் கடன் பத்திரங்கள் ஏஏ-வுக்கும் மேலான கிரெடிட் ரேட்டிங் உடைய பத்திரங்களில் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான அதானி குழும பங்குகள் பலவும் இன்று மீண்டும் தொடர்ந்து சரிவினைக் கண்டுள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி நிறுவனம் தொடர்ந்து எதிர்ப்பினை காட்டி வரும் நிலையில், மூன்று நாட்களில் நிறுவனங்களில் பங்கு சந்தையில் 66 பில்லியன் டாலராக உயர்த்தியது.

உரிமை பங்கு வெளியீடு

உரிமை பங்கு வெளியீடு

பிளாக்ஷிப் அதானி எண்டர்பிரைசஸ் இந்த வாரம் பாலோ ஆன் ஷேர் சலுகையுடன் ஒரு முக்கியமான திட்டத்தை செய்து வருகின்றது.

இதற்கிடையில் அதானி குழுமத்தின் பிரச்சனையை 4% ஏற்றத்தினை கண்டுள்ளது. ஆனால் ஆரம்ப ஆதாயங்கள் 10% மற்றும் சலுகை விலையை விட கணிசமாக குறைவாக இருந்தது.

அதானி குழும பங்குகள் கடும் சரிவு

அதானி குழும பங்குகள் கடும் சரிவு

அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கும் விலையானது ஒவ்வொன்றும் 20% சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 18%மும், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் பங்குகள் ஒவ்வொன்றும் 5% சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோனுக்கு 0.5% சரிவினைக் கண்டுள்ளது.

மொத்த சொத்து மதிப்பு

மொத்த சொத்து மதிப்பு

எல்ஐசி-யின் கீழ் உள்ள நிர்வாகத்தின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக செப்டம்பர் 30,2022 நிலவரப்படி உள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் பங்கு விகிதம் 0.975% ஆக உள்ளது.

எல்ஐசி நிறுவனம் அதன் கடன்களை மதிப்பிடுவதற்கும், கடன் தொகை வரம்பை நிர்ணயிப்பதற்கும் ஒரு வலுவான நடைமுறையை பின்பற்றுகிறது.

மக்கள் நலனே முக்கியம்

மக்கள் நலனே முக்கியம்

செப்டம்பர் 2022 நிலவரப்படி, எல்ஐசி-யின் கிடைக்கக்கூடிய கடனளிப்பு அளவு 160% இலக்கை விட அதிகமாக இருந்தது. எல்ஐசி வாரியமும் அதன் நிர்வாகமும் அனைத்து பங்குதாரர்களிடமும் அதன் பொறுப்புகளில் உறுதியுடன் உள்ளது. அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை தொடர்ந்து எல்ஐசி பின்பற்றும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC invested over Rs 36,400 crore in the Adani Group company

LIC invested over Rs 36,400 crore in the Adani Group company
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X