ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்குப் பின்பு போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் என அடுத்தடுத்து அதானி குழுமத்தின் வினோத் அதானி-யின் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பங்குகளைக் கைப்பற்றிய விஷயத்தை வெளியிட்டு வரும் வேளையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் வேளையில், பங்குச்சந்தையில் இருக்கும் 10 அதானி குழும பங்குகள் தனது உச்ச விலையில் இருந்தது குறைந்தபட்சம் 60 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் அதானி குழும முதலீட்டாளர்கள் அனைவரும் அதிகப்படியான இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள், அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள், ரீடைல் முதலீட்டாலளர்கள் முதலீடு செய்துள்ளது.
அப்படி அதானி குழுமத்தில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து வரும் எல்ஐசி நிறுவனம் சுமார் 5 அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மதிப்பு, முதலீடு செய்ததைக் காட்டிலும் முதல் முறையாகச் சரிந்துள்ளது. அதாவது எல்ஐசி நிறுவனம் அதானி பங்குகளின் purchase value-ஐ காட்டிலும் குறைந்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் 5 அதானி நிறுவனத்தில் சுமார் 30,127 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு 26,861.9 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது, அதாவது முதலீட்டு மதிப்பை காட்டிலும் 11 சதவீதம் சரிந்துள்ளது.
அதானி குழும நிறுவனங்கள்
அதானி குழும நிறுவனத்தில் அதிகப்படியான பங்கு இருப்பைக் கொண்ட உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களில் எல்ஐசி முதல் இடத்தில் உள்ளது. அதானி போட்ஸ் & SEZ நிறுவனத்தில் 9.14 சதவீத பங்குகள், அதானி டோட்டல் கேஸ் 5.96 சதவீத பங்குகள், அதானி எண்டர்பிரைசஸ் 4.23 சதவீத பங்குகள், அதானி டிரான்ஸ்மிஷன் 3.65 சதவீத பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி 1.28 சதவீத பங்குகளை டிசம்பர் காலாண்டின் இறுதியில் வைத்திருந்தது.
5 அதானி குழும நிறுவனங்கள்
இந்த 5 அதானி குழும நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்தது 30,127 கோடி ரூபாய். இந்த முதலீட்டின் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்தது, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு இதன் மதிப்பு வெறும் 26,861.88 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் டிசம்பர் 2022 வரையில் கடந்த 9 காலாண்டுகளாகத் தொடர்ந்து அதானி குழும நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் முதலீடு
செப்டம்பர் 2020 முதல் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 7 நிறுவனத்தில் 4 நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து தனது பங்கு இருப்பை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்பு அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேவேளையில் Valuation Guru என அழைக்கப்படும் அஸ்வத் தாமோதரன் வெளியிட்ட அறிக்கையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் பெரிய அளவில் சரிந்தாலும் இன்னும் தனது கணக்கின் படி அதிகமாகவே உள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.
30,127 கோடி ரூபாய்
ஜனவரி 24 அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 19.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 61 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 7,36,671 கோடி ரூபாயாக உள்ளது. இந்த மோசமான சரிவுக்கு மத்தியில் அனைத்து வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகள் அதானி குழுமத்தில் வைத்திருக்கும் கடன், முதலீடு விபரங்களை வெளியிட்டது. இந்த நிலையில் எல்ஐசி 30,127 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ஜனவரி 27ல் 56,142 கோடி ரூபாயாக உள்ளது என அறிவித்தது.


Click it and Unblock the Notifications