இந்திய பங்குச்சந்தையில் பேடிஎம் தோல்விக்குப் பின்பு ஐபிஓ வெளியிட பல முன்னணி நிறுவனங்களும் பயப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு பல குழப்பங்கள் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட்டது.
மத்திய அரசு எடுத்த ரிஸ்க்-கிற்கு 2வது நாள் முடிவிலேயே பலன் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்ஐசி நிறுவனம்
எல்ஐசி நிறுவனத்தின் பிரம்மாண்ட ஐபிஓ மே 4ஆம் தேதி ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (மே 5) முடிவில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) ஐபிஓ-வின் 100 சதவீத பங்குகளுக்கும் முதலீடு குவிந்துள்ளது.
ஐபிஓ சந்தை
இந்திய ஐபிஓ சந்தையில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 20,557 கோடி என்ற மிகப்பெரிய ஐபிஓ-வில் முதலீடு செய்ய மே 9 வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2வது நாளிலேயே 100 சதவீத பங்குகளுக்கும் முதலீடு குவிந்தது மகிழ்ச்சியான செய்தியாகும்.
சில்லறை முதலீட்டாளர்கள்
இதேபோல் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்குப் போதுமான முதலீடு வராது என ஒரு கணிப்பு இருந்த வேளையில் மத்திய அரசின் கோரிக்கை அடிப்படையில் தேசிய பங்குச்சந்தை யாரும் அளிக்காத சலுகையான சனிக்கிழமை ஐபிஓ-வில் முதலீடு செய்யும் சலுகை அளிக்கப்பட்டது.
1.03 மடங்கு பங்குகள்
மும்பை பங்குச்சந்தையின் தரவுகளின்படி, எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள 16,20,78,067 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் 16,68,60,765 ஈக்விட்டி பங்குகளுக்கு முதலீடு செய்து உள்ளனர். அதாவது மொத்த ஐபிஓ பங்குகளுக்கு 2வது நாள் முதலீட்டில் 1.03 மடங்கு பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.
ஐந்து பிரிவுகள்
எல்ஐசி நிறுவனம் ஐந்து பிரிவுகளில் பங்குகளை இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்யும் நிலையில் அனைவரின் கண்களும் எல்ஐசி பணியாளர்கள் மற்றும் எல்ஐசி பாலிசிதாரர்கள் ஒதுக்கீடுகள் மீது தான் உள்ளது. எல்ஐசி பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பங்குகளுக்கு 3.11 மடங்கும் மற்றும் எல்ஐசி பாலிசிதாரர்கள் 2.22 மடங்கும் முதலீடு குவிந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications