லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
எனினும் அதற்கு சில கண்டிசன்களையும் போட்டுள்ளது. அதென்ன கண்டிசன். இதனால் என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.
பாலியுடன் பான் இணைப்பு
எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நினைத்தால், பிப்ரவரி 28-க்குள் எல்ஐசி- பாலிசியுடன் பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் பாலிதாரர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பெற முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கின்றது எல்ஐசி.
10% பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீடு
ஏனெனில் மொத்த வெளியீட்டில் 10% இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என எல்ஐசி முன்னதாக அறிவித்திருந்தது. அதோடு பாலிசி ஹோல்டர்களுக்கு வெளியீட்டு விலையில் சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஆக எல்ஐசியின் இந்த பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் பாலிசிதாரர்கள் கட்டாயம், பாலிசியுடன் பான் நம்பரை இணைக்க வேண்டும். இந்த மெகா பங்கு வெளியீட்டில் சாதாரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ள நிலையில், பாலிசி ஹோல்டர்கள் எளிதில் பாலிசிகளை பெற கட்டாயம் பான் நம்பரை இணைத்திருந்தால் தான் உதவும் என நம்பப்படுகிறது.
எப்படி இணைப்பது?
எல்ஐசி-யின் https://licindia.in/ என்ற இணைதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் Online pan registration என்பதை கிளிக் செய்யவும்.அது அடுத்ததாக ஒரு புதிய பக்கத்தில் தொடங்கும். அதில் Proceed என்ற ஆப்சன் இருக்கும்.
அடுத்ததாக உங்களது இமெயில், பான் என், மொபைல் எண், பாலிசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
அதன் பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா எழுத்தினை பதிவு செய்யவும். அதன் பிறகு ஓடிபி என்பதை கிளிக் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
ஓடிபி-யை பதிவு செய்து பிறகு சப்மிட் கொடுத்தால், உங்கள் பதிவு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என வரும்.
எப்படி செக் செய்வது?
https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus என்ற இணைய பக்கத்தில் சென்று உங்களது பாலிசி என், பிறந்த தேதி, உங்களது பான் நம்பர், கேப்ட்சா எழுத்துகளை கொடுத்து சப்மிட் கொடுக்கவும். இதில் உங்களது பாலிசியுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications