மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்ட நிலையில், ஒமிக்ரான் மற்றும் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் காரணமாகப் பல முயற்சிகள் தோல்வி அடைந்தது. அப்படி மத்திய அரசின் தோல்வி அடைந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் தனியார்மயமாக்கல்.
இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு தனது வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை எளிதாகவும் விரைவாகவும் திரட்ட முடியும், என்பது மட்டும் அல்லாமல் மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறை அளவீட்டை பெரிய அளவில் குறைக்க முடியும்.
எல்ஐசி ஐபிஓ
இதனால் மத்திய அரசு நீண்ட காலமாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை திரட்ட திட்டமிட்டு வரும் நிலையில்.
பிப்ரவரி 1
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் எனவும், இது தான் முதலீட்டு சந்தையின் மிக முக்கியமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1956 முதல்
இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் சுமார் 66 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் 1956ஆம் ஆண்டுச் சுமார் 245 இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
கடந்த ஒரு வருடமாக மத்திய அரசு எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதற்காக பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும், தொடர்ந்து தாமதமாகி வருகிறது. சமீபத்தில் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான மாற்றங்களைச் செய்தது.
பணி காலம் நீட்டிப்பு
மத்திய அரசு எல்ஐசி ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு உள்ள காரணத்தால் எல்ஐசி நிறுவனத்தின் சேர்மன் எம்.ஆர்.குமார்-ன் பதவி காலத்தை ஒரு வருடம் நீட்டித்துள்ளது. இதேபோல் நிர்வாக இயக்குனர் ராஜ் குமார்-ன் பதவிக் காலமும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 2022க்குள்
தற்போது மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அளவீடு அதிகரிப்பு, எல்ஐசி உயர் அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் நாளை வெளியிடும் பட்ஜெட் அறிவிப்பில் மார்ச் 2022க்கு மோடி அரசு நிர்ணயம் செய்த இலக்கை அடையும் வகையில் ஐபிஓ வெளியிடுவது குறித்து உறுதியான முடிவை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications