எல்ஐசி பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடி.. BPCL மூலம் ரூ.80,000 கோடி வரை திரட்டலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான, எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை, பொது பங்கு வெளியீடு மூலம் விற்க சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகின்றது.

இது குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ஒரு அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசு 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட 2021 - 22ம் நிதியாண்டில் இலக்கு வைத்துள்ளது. இது அடையக்கூடியது தான்.

இதில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பொது பங்கு விற்பனை மூலம் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஊழியர்களின் கருத்து

ஊழியர்களின் கருத்து

ஏற்கனவே எல்ஐசி ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கும் போது, அதை ஏன் பொது பங்கு வெளியீட்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அரசாங்கத்தின் முதலீடுகளில் கணிசமான அளவு எல்ஐசி வழங்கியுள்ளது. மேலும் அரசாங்கத்திற்கு நிதி தேவைப்படும் போதெல்லாம் எல்ஐசியைத் தேடி செல்கிறது. அதிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகத்துறை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் நிதி வழங்கி வருகிறோம் என்றெல்லாம் எல்ஐசி ஊழியர் சங்கங்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது எல்ஐசி பங்கு விற்பனை குறித்தான விரைவில் செயல்படுத்தப்படலாம் என்ற நிலையே நீடித்து வருகின்றது.

இலக்கை அடைவோம்

இலக்கை அடைவோம்

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் விர்சுவல் மாநாட்டில் பேசிய, சுப்பிரமணியன், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2.10 கோடி ரூபாய் நிதி திரட்டல் இலக்கில், 2021 - 22ம் நிதியாண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும். இதில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் 75,000 - 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டலாம். அதோடு எல்ஐசி பொதுபங்கு விற்பனை மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் பங்கு

அரசின் பங்கு

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அரசு வசம் 52.98 சதவீதம் பங்கள் உள்ளது. இந்த பங்கு விற்பனைக்காக ஏற்கனவே இதற்கான expression of interest விண்ணப்பங்கள் அளிக்க அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேதாந்தா குழுமம், அப்பல்லோ குளோபல் மற்றும் I Squared Capital's Indian unit Think Gas உள்ளிட்ட நிறுவனங்கள், பிபிசிஎல் - லின் பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கினை அடையலாம்

இலக்கினை அடையலாம்

ஆக நடப்பு நிதியாண்டில் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த இலக்கு எட்ட முடியாத நிலையில், அடுத்த நிதியாண்டில் இலக்கை அடைவோம் என கூறியுள்ளது. ஆக நிச்சயம் அடையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது குறித்த முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்கம் மற்றும் நிதிச் சந்தை ஏற்ற இறக்கத்தை நல்ல முறையில் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lic ipo எல்ஐசி
English summary

LIC ipo may bring in Rs.1 lakh crore: said CEA

LIC IPO updates.. LIC ipo may bring in Rs.1 lakh crore: said CEA
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X