எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு மே 4ம் தேதி தொடங்கவுள்ளது. மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே முக்கிய முதலீட்டாளர்களுக்கு மே 2ம் தேதி தொடங்கவுள்ளது.
இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 - 949 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஓவின் மதிப்பு 20,557 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே, பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், இதே ஊழியர்களுக்கு பங்குக்கு 40% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது பட்டியல்
பங்கு ஒதுக்கீடானது மே 12 அன்று செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 16 அன்று டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ மதிப்பு குறைப்பு
சந்தையில் தற்போது நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் தனது ஐபிஓ மதிப்பினை கிட்டதட்ட 60% குறைத்துள்ளது.
இது முன்னதாக நாட்டிலேயே வரலாறு காணாத ஐபிஓவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
எல்ஐசி பங்கு வெளீயீட்டில் 50 சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை நடந்து வரும் நிலையில், பொதுப் பங்கு வெளியீடானது தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டுடிருந்த நிலையில், மே 12ம் தேதிக்குள் எல்ஐசி விற்பனையை தொடங்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் பொதுப் பங்கு வெளியீடு மே 4ம் தேதி தொடங்கி மே 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்குகள்
இந்த பங்கு வெளியீட்டில் 221.37 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யபடவுள்ளன. இதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 59.29 மில்லியன் பங்குகளாக இருக்கும். இதே பணியாளர்களுக்கு 1.58 மில்லியன் பங்குகளும், பாலிசி ஹோல்டர்களுக்கு 22.14 மில்லியன் பங்குகளும், QIB முதலீட்டாளர்களுக்கு 98.83 மில்லியன் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications