இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடும் எல்ஐசி நிறுவனம் அரசு நிறுவனமாக இருக்கும் காரணத்தால் சனிக்கிழமையும் முதலீடு செய்யச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் மாபெரும் 21000 கோடி ரூபாய் ஐபிஓ-வில் எல்ஐசி ஊழியர்களும், எல்ஐசி பாலிசிதாரர்களும் மற்ற பிரிவினரைக் காட்டிலும் அதிகப்படியான முதலீட்டை செய்துள்ளனர். இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்..?!
எல்ஐசி
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 2ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்ட நிலையில் மார்ச் 4ஆம் தேதி அதாவது நேற்று ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சிறப்பான முதலீட்டை எல்ஐசி இந்த ஐபிஓ-வில் பெற்று வந்தாலும், எல்ஐசி ஊழியர்களுக்கும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது.
சில்லறை விற்பனை
இந்த நிலைக்கு முக்கியக் காரணம் சில்லறை விற்பனை பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்குப் பங்கு ஒதுக்கீடு அனைத்தும் சீட்டுக் குலுக்கல் முறையில் லாட் அடிப்படையில் அளிக்கப்படும். அதாவது 15 எல்ஐசி பங்குகள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி பணியாளர்கள்
ஆனால் எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி பணியாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் முதலீட்டு அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் பங்குகள் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 15 எல்ஐசி பங்குகள் கிடைக்காவிட்டாலும் கட்டாயம் சில எண்ணிக்கையில் பங்குகள் கிடைக்கும்.
அனைவருக்கும் பங்கு
இத்தகைய முறையில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் கட்டாயம் ஐபிஓவில் பங்குகள் கிடைக்கும் என்பது தான். யாருக்கும் ஏமாற்றம் இருக்காது என்பதால் மத்திய அரசு இந்த முறையைத் தேர்வு செய்துள்ளது.
வாய்ப்பு
எல்ஐசி பாலிசிதாரர் மற்றும் பணியாளர்கள் பிரிவின் கீழ் வந்தால், ஒருவர் எவ்வளவு அதிகமாக விண்ணப்பிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அதிக எல்ஐசி பங்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
4 லட்சம் வரை
எல்ஐசி பாலிசிதாரர் மற்றும் பணியாளர்கள் பிரிவின் கீழ் ஒருவர் தலா 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் 210 பங்குகளைப் பெற முடியும். இதேபோல் இரு பிரிவிலும் வருபவர்கள் உயர்மட்ட அளவுகள் விதிமுறைப்படி 4 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications