ஒரே திட்டம்.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..?!

இந்திய காப்பீட்டு சந்தையை பொறுத்தவரை மத்திய அரசு சொந்தமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் மட்டும் தான் அதிகப்படியான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

எல்ஐசி நிறுவனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்கள் இருந்தாலும், எல்ஐசி-யின் வேகத்தை யாராலும் ஈடுக்கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. குறிப்பாக மக்கள் மத்தியில் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அரசுக்கு சொந்தமான நிறுவனம் அதிக நம்பிக்கையை பெற்று, வர்த்தகத்திலும் அதிக சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

எல்ஐசி பாலிசிகள் காப்பீட்டு சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மக்களின் முதலீட்டுக்கு அதிக வருமானத்தையும் தருகின்றன. இதில் முக்கியமான ஒரு திட்டத்தை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஜீவன் அக்ஷய்

ஜீவன் அக்ஷய்

எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் அக்ஷய் சிறந்த பாலிசிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு மொத்த தொகையை செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். எல்ஐசி நிறுவனத்தின் பல பாலிசிகள் உள்ளது, சில முற்றிலும் லைஃப் கவர் பாலிசிகள், சில பங்குச்சந்தை முதலீட்டை சார்ந்து இருக்கும் பாலிசிகள், இப்படி பல உள்ளது.

மாதம் ரூ 20000 பென்ஷன்

மாதம் ரூ 20000 பென்ஷன்

ஆனால் எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் சிங்கிள் ப்ரீமியம் தொகையின் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எதிராக மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதியாக முறையில் அளிக்கிறது. எல்ஐசி ஜீவன் அக்ஷய் எப்படி முதலீட்டாளருக்கு மாதம் ரூ 20000 கொடுக்கிறது.

40.72 லட்சம் முதலீடு

40.72 லட்சம் முதலீடு

ஒவ்வொருவரும் மாதம் ரூ.20,000 சம்பாதிக்க வேண்டுமானால், ஒருவர் 40,72,000 ரூபாயை எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் சிங்கிள் ப்ரீமியம் முதலீடு செய்ய வேண்டும். இது சற்று பெரிய தொகையாக இருந்தாலும், ஓய்வுகாலத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என திட்டமிடம் அனைவருத்தும் இது சரியான திட்டமாக இருக்கும்.

குறைந்த தொகை

குறைந்த தொகை

அப்படியானால் குறைந்த தொகையை முதலீடு செய்வோருக்கு இத்திட்டம் பொருந்தாத என நீங்கள் கேட்டால், அதற்கு பதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிய தொகை கூட முதலீடு செய்ய முடியும்.

6 லட்சம்

6 லட்சம்

இப்படி, ஒரு முதலீட்டாளர் 6,10,800 ரூபாயை செலுத்தினால், எல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் என முதலீடு செய்தால். ஒரு ஆண்டு ஓய்வூதியமாக 76,650 ரூபாய் கிடைக்கும். அதாவது 6 மாதத்திற்கு 37,000 ரூபாய் கிடைக்கும்.

வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்

வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்

எல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறுவார். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆண்டுக்கு 12000 ரூபாய். அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.

90 நாட்கள்

90 நாட்கள்

எல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் மற்ற நன்மைகள் பட்டியலில் கடன் பெறுவதற்கான வசதியும் உள்ளது. பாலிசி வைத்திருப்பவர்கள் பாலிசியை வாங்கிய 90 நாட்களுக்குப் பிறகு கடனைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1 லட்சம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+