சென்னை: இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் அனைவரும் தங்களின் எதிர்கால நலனுக்காக சேமிப்பதற்கான நம்பகமான முதலீட்டு திட்டத்தை தேடி வருகின்றனர். திட்டங்கள், குறிப்பாக அரசாங்க திட்டங்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். முதலீடு பாதுகாப்பானதாக இருக்க, எந்த திட்டத்தை பயன்படுத்தி முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற்றுத் தரும் என புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். அப்படி ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்... இந்த திட்டம் மூலம் தினமும் 200 ரூபாய் செலுத்தி, ரூபாய் 28 லட்சம் வரை லாபம் பெற முடியும்.
இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் வழங்கப்படும் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாம் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். இந்த எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் யாரெல்லாம் சேமிக்கலாம், எவ்வாறு கணக்கைத் தொடங்குவது மற்றும் என்னென்ன சலுகைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

எல் ஐ சி ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தில் ஆபத்து காப்பீடு மற்றும் இறப்பு காப்பீடு என இரண்டு வகையான காப்பீடுகள் உள்ளன. அவை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்கும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் முதலீடு செய்யப் போகும் தொகையை நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாக அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது காலாண்டு தொகையாகவும் செலுத்தலாம். மாத சம்பளம் பெறுபவர்கள், மாதம் மாதம் கூட பணம் செலுத்தலாம்.
12 முதல் 15 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் இந்த எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் தொடர்ந்து 12 - 20 ஆண்டுகள் வரை நாம் முதலீடு செய்ய வேண்டும்.
எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தின் பலன்கள்: எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலுத்தினால் 20 ஆண்டுகள் முடிந்த பிறகு 28 லட்ச ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் உங்களுக்கு இரண்டு காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இறப்பு காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு. இந்த பாலிசியை பயன்படுத்தி முதலீடு செய்த நபர் 0 - 5 ஆண்டுகளுக்குள் இறந்து விட்டால் அடிப்படை தொகையில் 100 சதவீதமும், 5 - 10 வருடத்திற்குள் பாலிசி பெற்றவர் இறந்து விட்டால் அடிப்படைத் தொகையில் 125 சதவீதமும், 11 - 15 வருடத்திற்குள் பாலிசி பெற்றவர் இறந்து விட்டால் அடிப்படை தொகையில் 150 சதவீதமும், 16 - 20 வருடத்தில் பாலிசி பெற்றவர்
இறந்து விட்டால், 200 சதவீத அடிப்படைத் தொகை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ரைடர் பாலிசியும் வழங்கப்படும். மேலும் முதலீடு செய்யும் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் 2 சதவிகித தள்ளுபடி மற்றும் அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் 1 சதவீத பிரீமியம் தள்ளுபடியும் கிடைக்கும்.
எல் ஐ சி ஜீவன் பிரகதி திட்டத்தில் முதலீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்: பான் கார்டு, ஆதார் கார்டு. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் நம்பர் மற்றும் பாஸ்புக்.
எப்படி விண்ணப்பிப்பது?: இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் எல் ஐ சி அலுவலகங்களை அணுக வேண்டும். அங்கிருந்து திட்டத்திற்கு தேவையான பிரத்தியேக விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களோடு இணைத்து முதலீட்டு தொகையுடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications