இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஒய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது.
அதில் ஒன்று தான் எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டம். இது நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு திட்டமாகும்.
சரி இந்த திட்டத்தில் எப்படி இணையலாம். என்னென்ன ஆவணங்கள் எல்லாம் தேவை. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் உ:ள்ள சலுகைகள் என்னென்ன? மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பாலிசியை எவ்வாறு எடுப்பது?
எல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. அதிலும் ஓய்வுக்காலத்திற்கு பின்பு, நல்ல பலன் உண்டு எனில் நிச்சயம் அனைவரும் எடுக்க வேண்டிய ஒரு பாலிசிதானே.
வயது தகுதி என்ன?
LIC-ன் இந்த புதிய பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்பது வரையரை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம். எல்ஐசி-யின் இந்த திட்டங்கள் பல தனிச் சிறப்புகளைக் கொண்டுள்ளது.
உடனடி ஆண்டுத் தொகை திட்டம்
ஒருவர் குறைந்தபட்ச முதலீட்டில் 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு மாதாந்திரம், வருடாந்திரம், அரை ஆண்டு திட்டம், காலாண்டு திட்டம் என எவ்வளவு வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும். ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு வருவாய் கிடைக்கும்.
முதிர்வு தொகை எல்லை
முதிர்வு தொகையை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது. இதே காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச கால அளவானது 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் வசதி உண்டு
பாலிசி தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும். உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும்.
உத்திரவாத வருவாய் திட்டம்
இன்சூரன்ஸ் எடுப்பவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதம் மாதம் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டால், வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொருத்து இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும்.
உத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்
காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது, பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். அதோடு எல்ஐசியின் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications