2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆண்டுக்கு ஆண்டு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே, மும்பை உள்பட மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியால் நாட்டின் மிகப்பெரிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பெரிய ஜாக்பாட் வருமானத்தை அடித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் நிர்வாக குழு, கிரிக்கெட் அணிகளின் அனைத்து உரிமையாளர்களிடமும் அணியை தனி நிறுவனங்களாக மாற்றும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து, சிஎஸ்கேவின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ், 2014ல் தனது உரிமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (சிஎஸ்கேசிஎல்) என்ற தனி நிறுவனமாக பிரித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரர்கள் சிஎஸ்கேசிஎல் பங்குகளை 1:1 என்ற விகிதத்தில் பெற்றனர்.

அந்த நேரத்தில் எல்ஐசி, இந்தியா சிமெண்ட்ஸின் சுமார் 1.8 கோடி பங்குகளை வைத்திருந்தது, அதாவது 6.04 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் பிரிந்தது முதல், சிஎஸ்கேவில் எல்ஐசி செய்த முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளது. உதாரணமாக, 2019ல் பட்டியலிடப்படாத சந்தையில் சிஎஸ்கேவின் ஒரு பங்கின் விலை ரூ.31ல் இருந்தது. தற்போது இது ரூ.190-195ஆக உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் (6 ஆண்டுகளில்) சிஎஸ்கேவின் பங்கு விலை 529 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ல் சிஎஸ்கே-வின் பட்டியலிடப்படாத பங்கு விலை வாழ்நாள் உச்சமான ரூ.223ஐ எட்டியது. சிஎஸ்கேவின் தற்போதைய விலையில் பார்த்தால் கூட, சிஎஸ்கேவில் மேற்கொண்ட முதலீட்டுக்கு எல்ஐசிக்கு 5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
ஐபிஎல்லில் சிஎஸ்கே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதால், எல்ஐசியின் முதலீடு பாரம்பரி சொத்துக்களுக்கு அப்பால் அதன் போர்ட்ஃபோலியாவை பல்வகைப்படுத்துதவதில் ஒரு மூலோபாய நடவடிக்கையாக உள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தில் எல்ஐசி 4 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது.
இன்க்ரெட் மணி அறிக்கையின்படி, பொதுவாக ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் பங்கு தேவை அதிகரிக்கும். குறிப்பாக அணி சிறப்பாக செயல்படும் போது பங்குக்கான தேவை உயரும். போட்டி உற்சாகமாக நடக்கும் போது பங்கின் விலை அதிகரிக்கும், போட்டிகள் நிறைவடைந்ததும் பங்கின் விலை குறையும். இந்த சீசன் டிரெண்ட் அணியின் வலுவான பிராண்ட் ஈர்ப்பையும் முதலீட்டாளர் உணர்வையும் பிரதிபலிக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வெளிபார்வைக்கு மிகப்பெரிய விளையாட்டு தொடராக தெரிந்தாலும், அதன் பின்னால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications