பொதுவாக பங்கு சந்தையில் ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட மிக நல்ல வாய்ப்பிலும், சில ஐபிஒ-க்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்கும் ஐபிஓ-வில் எல்ஐசி-யும் ஒன்று.
பொதுவாக பங்கு சந்தையில் ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட மிக நல்ல வாய்ப்பிலும், சில ஐபிஒ-க்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தும்.
இதுவரை இல்லாத அளவு
இதற்கிடையில் எல்ஐசி ஐபிஒ-வானது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 40,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே இது வரலாற்று சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிகள் மாற்றம்
இந்த பங்கு வெளியீட்டுக்காக மூலதன சந்தை விதிகள், எஸ் எம் எஸ் விதிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் என பலவற்றிலும் பல மாற்றங்களை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த பங்கு வெளியீட்டுக்கு தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் பற்றாகுறை
இது அரசின் பட்ஜெட்டில் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அதனை அடைய ஏதுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல் ஐ சியின் இந்த மெகா ஐபிஓ திட்டங்கள் பிரமிக்க வைக்கிறது என்றாலும், தேவையான சந்தைப்படுத்தல் முயற்சியினையும் நிறுவனம் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறப்பு நிறுவனம்
மேலும் வெளி நாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்காக, FDI முதலீட்டு விதிகளை எளிதாக்கலாம். பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெளி நாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் எல் ஐ சியில் அனுமதிக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனம் என்பது நினைவுகூறத்தக்கது.
எப்போது தாக்கல்
எல்ஐசி-யின் ஐபிஓ-வுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் செபியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஏற்கனவே பல முறை தகவல்கள் வெளியாகின. எனினும் இன்று வரையில் கொரோனா, அதனை தொடர்ந்து ஓமிக்ரான் என பல காரணிகளினால் தாக்கல் செய்யப்படவில்லை.
எது எப்படியோ விரைவில் முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications